ஊக்கமருந்து சோதனையில் தோல்வி: பளுதூக்குதல் வீராங்கனை சுஷிலா பன்வார் சஸ்பெண்ட்

இந்திய பளுதூக்குதல் வீராங்கனை சுஷிலா பன்வார் ஊக்கமருந்து சோதனையில் தோல்வி அடைந்ததை அடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
ஊக்கமருந்து சோதனையில் தோல்வி: பளுதூக்குதல் வீராங்கனை சுஷிலா பன்வார் சஸ்பெண்ட்

இந்திய பளுதூக்குதல் வீராங்கனை சுஷிலா பன்வார் ஊக்கமருந்து சோதனையில் தோல்வி அடைந்ததை அடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இந்திய கால்பந்து வீரர் சுப்ரதா பால் ஊக்கமருந்து சோதனையில் தோல்வி அடைந்துள்ள நிலையில், அடுத்த சில நாள்களிலேயே இந்திய வீராங்கனை ஒருவர் ஊக்கமருந்து புகாரில் சிக்கியிருப்பது விளையாட்டுத் துறையினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, இந்திய பளுதூக்குதல் சம்மேளனத்தின் செயலர் சாதேவ் யாதவ் கூறியதாவது:
பாட்டியாலாவில் உள்ள தேசிய பயிற்சி முகாமில் பங்கேற்ற வீரர்/வீராங்கனைகளிடம் கடந்த மார்ச் 25-ஆம் தேதி சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு (நாடா) சோதனை மேற்கொண்டது. அப்போது, 42 பளுதூக்குதல் வீரர்/வீராங்கனைகளின் மாதிரிகளில் நடத்திய சோதனையில், சுஷிலா பன்வாரின் 'ஏ' மாதிரியில் ஊக்கமருந்து பயன்படுத்தியதற்கான தடயங்கள் இருந்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக நாடா அளித்த தகவலின் பேரில், சுஷிலா பன்வார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்று சாதேவ் யாதவ் கூறினார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சுஷிலா பன்வார், குவாஹாட்டியில் கடந்த ஆண்டு நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டியில், 75+ கிலோ எடைப் பிரிவில் 198 கிலோவைத் தூக்கி தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com