எம்சிசி-முருகப்பா கோப்பை ஹாக்கி: பெங்களூரு, ரயில்வே அணிகள் வெற்றி

எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டியின் 5-ஆவது நாளில் பெங்களூரு, இந்தியன் ரயில்வே அணிகள் வெற்றி பெற்றன.
திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் மோதிய பெங்களூரு-பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி அணியினர்.
திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் மோதிய பெங்களூரு-பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி அணியினர்.

எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டியின் 5-ஆவது நாளில் பெங்களூரு, இந்தியன் ரயில்வே அணிகள் வெற்றி பெற்றன.
சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 5-ஆவது நாளான திங்கள்கிழமை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஹாக்கி பெங்களூரு அணி 3-0 என்ற கோல் கணக்கில் பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி அணியைத் தோற்கடித்தது.
இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி தரப்பில் ரகுநாத், சந்தீப் கே.சிங், ராஜ்குமார் பால் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
பின்னர் நடைபெற்ற 2-ஆவது ஆட்டத்தில் இந்தியன் ரயில்வே அணி 4-0 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு ஹாக்கி யூனிட் அணியைத் தோற்கடித்தது. ரயில்வே அணி தரப்பில் ராஜூ பால் இரு கோல்களையும், கரண் பால் சிங், பிரதீப் சிங் ஆகியோர் தலா ஒரு கோலையும் அடித்தனர். ரயில்வே அணி 3-ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது.
இன்றைய ஆட்டங்கள்
ஹாக்கி ஒடிஸா-
மத்திய செகரட்டரியேட்
நேரம்: மாலை 4.15
ஓஎன்ஜிசி-
பஞ்சாப் நேஷனல் வங்கி
நேரம்: மாலை 6

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com