3-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க இலங்கை போராட்டம்

கொழும்பு டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் முடிவில் இலங்கை அணி இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க போராடி வருகிறது.
3-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க இலங்கை போராட்டம்

இந்தியா, இலங்கை அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நடந்தது. இதில் இந்திய அணி 304 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

இந்நிலையில், 2-ஆவது டெஸ்ட் போட்டி கொழும்புவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 622 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளெர் செய்தது. இதன்பின்னர் களமிறங்கிய இலங்கை அணியின் விக்கெட்டுகள் மளமளவென வீழ்ந்தது.

இதனால் அந்த அணி தனது முதல் இன்னிங்ஸில் 183 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. அதிகபட்சமாக டிக்வெல்லா 51 ரன்கள் சேர்த்தார். இந்திய தரப்பில் சிறப்பாக பந்துவீசிய அஸ்வின், 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 439 ரன்கள் பின்தங்கி ஃபாலோ ஆன் பெற்ற நிலையில் தனது 2-ஆவது இன்னிங்ஸை இலங்கை விளையாடி வருகிறது. இதில், 3-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் எடுத்துள்ளது. 

இலங்கையின் குஷால் மெண்டீஸ் 110 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். துவக்க வீரர் கருணரத்னே 92 ரன்களுடன் களத்தில் உள்ளார். இந்திய தரப்பில் உமேஷ் யாதவ், பாண்டியா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட இன்னும் 230 ரன்கள் பின்தங்கியுள்ளது. மேலும், 2 நாள் ஆட்டம் மீதமிருக்கும் நிலையில், இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க இலங்கை அணி தீவிரமாக போராடி வருகிறது.

இந்த டெஸ்ட் போட்டியை வென்று 3 போட்டிகள் கொண்ட தொடரையும் கைப்பற்ற இந்திய அணிக்கு 8 விக்கெட்டுகள் மட்டுமே தேவை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com