கொழும்பு டெஸ்ட்: இந்தியாவுக்கு இன்னிங்ஸ் வெற்றி

இலங்கைக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்தியா.
கொழும்பு டெஸ்ட்: இந்தியாவுக்கு இன்னிங்ஸ் வெற்றி

இலங்கைக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்தியா.
இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி, தொடரையும் கைப்பற்றியுள்ளது.
முதல் இன்னிங்ஸில் 183 ரன்களுக்கு சுருண்ட நிலையில், "பாலோ-ஆன்' பெற்று 2-ஆவது இன்னிங்ûஸ ஆடிய இலங்கை அணி 116.5 ஓவர்களில் 386 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 158 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் புஜாரா 133, ரஹானே 132, ஜடேஜா ஆட்டமிழக்காமல் 70 ரன்கள் குவித்தனர். இலங்கைத் தரப்பில் ரங்கனா ஹெராத் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பின்னர் முதல் இன்னிங்ûஸ ஆடிய இலங்கை அணி 49.4 ஓவர்களில் 183 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் டிக்வெல்லா அதிரடியாக ஆடி 48 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்தார். இந்தியத் தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்டுகளையும், முகமது சமி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
முதல் இன்னிங்ஸில் 439 ரன்கள் பின்தங்கிய இலங்கை அணி "பாலோ-ஆன்' பெற்றது. தொடர்ந்து 2-ஆவது இன்னிங்ûஸ ஆடிய இலங்கை அணியில் குஷல் மென்டிஸ் 110 ரன்கள் குவித்து ஆட்டமிழக்க, 3-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 60 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்திருந்தது. கருணாரத்னே 200 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 92, புஷ்பகுமாரா 2 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
கருணாரத்னே சதம்: 4-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்து ஆடிய இலங்கை அணியில் கருணாரத்னே 95 ரன்களில் இருந்தபோது ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் கொடுத்த கேட்ச்சை ராகுல் கோட்டைவிட்டார். இதனால் வாழ்வு பெற்ற கருணாரத்னே 224 பந்துகளில் சதமடித்தார். இது டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த 6-ஆவது சதமாகும்.
இலங்கை அணி 238 ரன்களை எட்டியபோது அஸ்வின் பந்துவீச்சில் ஸ்டெம்பை பறிகொடுத்தார் புஷ்பகுமாரா. தடுப்பாட்டம் ஆடிய அவர் 58 பந்துகளில் 16 ரன்கள் எடுத்தார். இதையடுத்து களம்புகுந்த கேப்டன் தினேஷ் சன்டிமல் 2 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்துவீச்சில் ரஹானேவிடம் கேட்ச் ஆனார்.
இதன்பிறகு கருணாரத்னேவுடன் இணைந்தார் மேத்யூஸ். இந்த ஜோடி 69 ரன்கள் குவித்தது. இலங்கை அணி 95.4 ஓவர்களில் 310 ரன்களை எடுத்திருந்தபோது கருணாரத்னே ஆட்டமிழந்தார். 307 பந்துகளைச் சந்தித்த கருணாரத்னே 16 பவுண்டரிகளுடன் 141 ரன்கள் குவித்து ஜடேஜா பந்துவீச்சில் ரஹானேவிடம் கேட்ச் ஆனார்.
சரிவுக்குள்ளான இலங்கை: இதன்பிறகு இலங்கையின் சரிவு தவிர்க்க முடியாததானது. மேத்யூஸ் 36, தில்ருவான் பெரேரா 4, டி சில்வா 17, டிக்வெல்லா 31 ரன்களில் ஆட்டமிழக்க, கடைசி விக்கெட்டான பிரதீப் 1 ரன் எடுத்த நிலையில் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இறுதியில் இலங்கை அணி 116.5 ஓவர்களில் 386 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணி கடைசி 76 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியத் தரப்பில் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், அஸ்வின், ஹார்திக் பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இவ்விரு அணிகள் இடையிலான 3-ஆவது டெஸ்ட் போட்டி வரும் 12-ஆம் தேதி பல்லகெலேவில் தொடங்குகிறது.


துளிகள்...

8

இந்திய அணி தொடர்ச்சியாக 8 டெஸ்ட் தொடர்களைக் கைப்பற்றியுள்ளது. 2015-இல் இதே இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி, அதன்பிறகு தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, இங்கிலாந்து, வங்கதேசம், ஆஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகளுக்கு எதிரான தொடரை வென்றிருந்தது. இப்போது மீண்டும் இலங்கைக்கு எதிரான தொடரைக் கைப்பற்றியதன் மூலம் தொடர்ச்சியாக 8 டெஸ்ட் தொடர்களைக் கைப்பற்றிய பெருமையைப் பெற்றிருக்கிறது. ஆஸ்திரேலிய அணி 2005 முதல் 2008 வரையிலான காலங்களில் தொடர்ச்சியாக 9 தொடர்களை வென்றதே இன்றளவும் சாதனையாக உள்ளது. இங்கிலாந்து அணி 1884 முதல் 1892 வரையிலான காலங்களில் தொடர்ச்சியாக 8 தொடர்களை வென்றிருக்கிறது.

1
இலங்கை மண்ணில் முதல்முறையாக இன்னிங்ஸ் வெற்றியைப் பதிவு செய்துள்ளது இந்தியா. கடைசியாக விளையாடிய 9 டெஸ்டுகளில் 3-ஆவது முறையாக இன்னிங்ஸ் வெற்றியைப் பெற்றிருக்கிறது இந்தியா.

8
இலங்கை மண்ணில் இதுவரை 23 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி 8-ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது.

7
இலங்கை அணி தனது சொந்த மண்ணில் 7-ஆவது முறையாக இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்துள்ளது. அதேநேரத்தில் கடந்த 17 ஆண்டுகளில் சொந்த மண்ணில் இலங்கை அணி சந்தித்த முதல் இன்னிங்ஸ் தோல்வி இதுதான்.

4
கடந்த ஓர் ஆண்டில் 4-ஆவது முறையாக டெஸ்ட் போட்டியில் ஆட்டநாயகன் விருதைப் பெற்றிருக்கிறார் ஜடேஜா. அவருக்கு அடுத்தபடியாக விராட் கோலி 3 முறை ஆட்டநாயகன் விருதை பெற்றிருக்கிறார்.


3-ஆவது டெஸ்ட்: ஜடேஜாவுக்கு தடை

ஐசிசி விதிமுறையை மீறியதற்காக இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவுக்கு பல்லகெலேவில் நடைபெறவுள்ள 3-ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை 2-ஆவது இன்னிங்ஸில் பேட் செய்தபோது 58-ஆவது ஓவரை வீசினார் ஜடேஜா. அப்போது இலங்கை வீரர் கருணாரத்னே கிரீஸýக்குள் நின்ற நிலையில், பந்தை ஸ்டெம்பை நோக்கி எறிந்தார். அதை அபாயகரமானது எனக்கூறி ஜடேஜாவை எச்சரித்தார் நடுவர்.
கடந்த 24 மாதங்களில் 6-ஆவது முறையாக ஐசிசி விதிமுறையை மீறியிருக்கிறார் ஜடேஜா. இதையடுத்து அவர், 3-ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதித்துள்ள ஐசிசி, அவருடைய போட்டி ஊதியத்தில் 50 சதவீதத்தை அபராதமாக விதித்துள்ளது.


ஸ்கோர் போர்டு

இந்தியா-622/9 டிக்ளேர் (புஜாரா 133, ரஹானே 132, ஜடேஜா 70, சாஹா 66, ராகுல் 57, அஸ்வின் 54, ரங்கனா ஹெராத் 4வி/154)

இலங்கை-183 (டிக்வெல்லா 51, மேத்யூஸ் 26, அஸ்வின் 5வி/69,
முகமது 2வி/13, ரவீந்திர ஜடேஜா 2வி/84)

2-ஆவது இன்னிங்ஸ்: இலங்கை

கருணாரத்னே (சி) ரஹானே (பி) ஜடேஜா 141 (307)

உபுல் தரங்கா (பி) உமேஷ் 2 (9)
குஷல் மென்டிஸ் (சி) சாஹா (பி) பாண்டியா 110 (135)
புஷ்பகுமாரா (பி) அஸ்வின் 16 (58)
தினேஷ் சன்டிமல் (சி) ரஹானே (பி) ஜடேஜா 2 (6)
ஏஞ்செலோ மேத்யூஸ் (சி) சாஹா (பி) ஜடேஜா 36 (66)
டிக்வெல்லா (சி) ரஹானே (பி) பாண்டியா 31 (56)
தில்ருவான் பெரேரா (ஸ்டெம்பிங்) சாஹா (பி) ஜடேஜா 4 (10)
டி சில்வா (சி) ரஹானே (பி) ஜடேஜா 17 (17)
ரங்கனா ஹெராத் நாட் அவுட் 17 (30)
நுவான் பிரதீப் (சி) தவன் (பி) அஸ்வின் 1 (9)
உதிரிகள் 9
மொத்தம் (116.5 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு) 386

விக்கெட் வீழ்ச்சி: 1-7 (தரங்கா), 2-198 (மென்டிஸ்), 3-238 (புஷ்பகுமாரா), 4-241 (சன்டிமல்), 5-310 (கருணாரத்னே), 6-315 (மேத்யூஸ்), 7-321 (பெரேரா), 8-343 (டி சில்வா), 9-384 (டிக்வெல்லா), 10-386 (பிரதீப்).

பந்துவீச்சு: உமேஷ் யாதவ் 13-2-39-1, அஸ்வின் 37.5-7-132-2, முகமது சமி 12-3-27-0, ரவீந்திர ஜடேஜா 39-5-152-5, ஹார்திக் பாண்டியா 15-2-31-2.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com