ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் விளையாட செரீனா வில்லியம்ஸ் திட்டம்!

ஜனவரி மாதம் நடைபெறுகிற ஆஸ்திரேலியன் ஓபன் போட்டியில் பங்கேற்க உள்ளதாக பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் விளையாட செரீனா வில்லியம்ஸ் திட்டம்!

ஜனவரி மாதம் நடைபெறுகிற ஆஸ்திரேலியன் ஓபன் போட்டியில் பங்கேற்க உள்ளதாக பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் கூறியுள்ளார்.

செரீனா வில்லியம்ஸ் தற்போது கர்ப்பமாக உள்ளார். இதனால் கடந்த சிலமாதங்களாக அவர் எந்தப் போட்டியிலும் பங்குபெறவில்லை. கடைசியாக கடந்த ஜனவரியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் 'ஓபன் எரா'வில் (1968-ல் அமெச்சூர் வீரர்களுடன் தொழில்முறை வீரர்களும் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். அது முதலான காலமே "ஓபன் எரா' ஆகும்.) அதிக பட்டங்களை (23) வென்றவர் என்ற சாதனையைப் படைத்தார் செரீனா. முன்னதாக ஸ்டெஃபி கிராஃப் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றிருந்ததே சாதனையாக இருந்தது. இன்னும் ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்லும்பட்சத்தில் மகளிர் டென்னிஸ் வரலாற்றில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றவரான மார்க்ரெட் கோர்ட்டின் சாதனையை சமன் செய்வார் செரீனா.

சமீபமாக அவர் எந்தப் போட்டியிலும் பங்கேற்கவில்லை. கடந்த ஆஸ்திரேலிய ஓபன் போட்டியின்போது 3 மாத கர்ப்பக் காலத்தில் இருந்துள்ளார். அந்த நிலையிலும் துணிச்சலுடன் போட்டியில் கலந்துகொண்டு சாம்பியனாகவும் ஆகியுள்ளார்.

அடுத்த மாதம் செரீனாவுக்குக் குழந்தை பிறக்கவுள்ளது. இந்நிலையில் அவர் மீண்டும் களத்துக்குத் திரும்புவது குறித்து பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது:

ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் பங்கேற்கவேண்டும் என விரும்புகிறேன். குழந்தை பிறந்த 3 மாதங்களுக்குப் பிறகு. அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்ற மார்க்ரெட் கோர்ட்டின் சாதனையைச் சமன் செய்ய ஆவலாக உள்ளேன். கர்ப்பம் ஆனது எனக்குள் புதிய சக்தியை அளித்துள்ளது. ஆடுகளத்தில் நான் வலுவான பெண்ணாகக் காட்சியளிக்கவே விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

வெள்ளையர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த பணக்காரர்களின் விளையாட்டான டென்னிஸில் தொழில்முறை வீராங்கனையாக 1995-ல் செரீனா கால் பதித்தார். அப்போது அவருக்கு வயது 14. அதன்பிறகு அபாரமாக ஆடிய செரீனா 1998-ல் முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டியில் ஆடும் வாய்ப்பை பெற்றார். அந்தப் போட்டியின் 2-வது சுற்றில் தனது மூத்த சகோதரியான வீனஸிடம் தோல்வி கண்ட செரீனா, 1999-ல் நடைபெற்ற அமெரிக்க ஓபனில் ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸை வீழ்த்தி முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றினார். அதன்பிறகு டென்னிஸ் உலகின் தவிர்க்க முடியாத வீராங்கனையாக உருவெடுத்த செரீனா, ஏறக்குறைய 6 ஆண்டுகள் தரவரிசையில் முதலிடத்தில் இருந்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com