இலங்கையில் சுதந்திர தினம் கொண்டாடிய இந்திய வீரர்கள்!

இந்தியாவின் 70-ஆவது சுதந்திர தினத்தை இந்திய கிரிக்கெட் அணியினர் இலங்கையின் பல்லகெலேவில் செவ்வாய்க்கிழமை கொண்டாடினர். இந்திய கேப்டன் விராட் கோலி தேசியக் கொடியை ஏற்றினார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்லகெலேவில் கொடியேற்றிய இந்திய கேப்டன் விராட் கோலி.
சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்லகெலேவில் கொடியேற்றிய இந்திய கேப்டன் விராட் கோலி.

இந்தியாவின் 70-ஆவது சுதந்திர தினத்தை இந்திய கிரிக்கெட் அணியினர் இலங்கையின் பல்லகெலேவில் செவ்வாய்க்கிழமை கொண்டாடினர். இந்திய கேப்டன் விராட் கோலி தேசியக் கொடியை ஏற்றினார்.
சுதந்திர தின கொண்டாட்டம் தொடர்பாக சுட்டுரையில் கோலி கூறியிருப்பதாவது: அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள். இந்தியன் என்பதில் ஒவ்வொரு நாளும் பெருமிதம் கொள்கிறேன். ஆனால் சுதந்திர தினத்தன்று அந்த பெருமை மேலும் அதிகமாகி எனக்குள் முற்றிலும் வித்தியாசமான உணர்வு ஏற்பட்டிருக்கிறது.
சுதந்திர தினம் எனக்கு சிறப்புமிக்க நாளாகும். ஏனெனில் இதேதினம் தான் எனது தந்தையின் பிறந்த நாள். எனவே இந்த நாள் எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் சிறப்புமிக்க
நாளாகும். நான் சிறுவனாக இருந்தபோது தில்லியில் சுதந்திர தினத்தன்று எனது நண்பர்களுடன் சேர்ந்து பட்டத்தை பறக்கவிட்டு மகிழ்வேன். அப்போது எல்லா இடங்களிலும் தேசியக் கொடி பறக்கவிட்டிருப்பதைப் பார்த்து ரசிப்பேன்.
அனைவரும் இந்த தினத்தை கொண்டாடுங்கள். உங்கள் இதயம் முழுவதும் இந்தியன் என்ற பெருமிதம் நிரம்பியிருக்கும். அந்த பெருமிதத்தை எப்போதும் உயிர்ப்போடு வையுங்கள். ஜெய்ஹிந்த் என குறிப்பிட்டுள்ளார்.
பயிற்சியாளர், இந்திய வீரர்கள், உதவி அலுவலர்கள் உள்ளிட்ட அனைவரும் சுதந்திர தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். தேசியக் கொடி ஏற்றப்பட்ட பிறகு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வென்றுவிட்ட இந்திய அணி, அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. அதன் முதல் ஆட்டம் வரும் 20-ஆம் தேதி நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com