புரோ கபடி: பெங்கால் வாரியர்ஸை பந்தாடியது புணேரி பால்டான்

5-ஆவது சீசன் புரோ கபடி லீக் போட்டியின் 28-ஆவது ஆட்டத்தில் புணேரி பால்டான் 34-17 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியைத் தோற்கடித்தது.
பெங்கால் வாரியர்ஸ் ரைடர் குன் லீயை மடக்கிப் பிடிக்க முயற்சிக்கும் புணேரி பால்டான் வீரர்கள்.
பெங்கால் வாரியர்ஸ் ரைடர் குன் லீயை மடக்கிப் பிடிக்க முயற்சிக்கும் புணேரி பால்டான் வீரர்கள்.

5-ஆவது சீசன் புரோ கபடி லீக் போட்டியின் 28-ஆவது ஆட்டத்தில் புணேரி பால்டான் 34-17 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியைத் தோற்கடித்தது.
ஆமதாபாதில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தின் ஆரம்பத்தில் இரு அணிகளும் அபாரமாக ஆட, முதல் 10 நிமிடங்களின் முடிவில் இரு அணிகளும் 5-5 என்ற புள்ளிகள் கணக்கில் சமநிலையில் இருந்தன.
புணேரி பால்டான் வீரர் ஜிபி மோர் ரைடின் மூலம் தனது 4-ஆவது புள்ளியைப் பெற, அந்த அணி 7-5 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதன்பிறகு அசத்தலாக ஆடிய புணேரி பால்டான், 15-ஆவது நிமிடத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணியை ஆல் அவுட்டாக்கியது. இதனால் புணேரி பால்டான் 12-5 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இதன்பிறகு 18-ஆவது நிமிடத்தில் மீண்டும் ஆல் அவுட்டாகும் நிலைக்குத் தள்ளப்பட்ட பெங்கால் வாரியர்ஸ், சூப்பர் டேக்கிள் மூலம் அதிலிருந்து தப்பியது. முதல் பாதி ஆட்டநேர முடிவில் புணேரி பால்டான் 17-10 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்திலும் தடுமாறிய பெங்கால் வாரியர்ஸ் அணி 25-ஆவது நிமிடத்தில் 11-20 என்ற கணக்கில் பின்தங்கியிருந்தது. இதன்பிறகு 2-ஆவது முறையாக பெங்கால் வாரியர்ஸ் ஆல் அவுட்டாக, புணேரி பால்டான் 24-11 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
பெங்கால் அணியின் முன்னணி ரைடரான குன் லீ 26-ஆவது நிமிடத்தில்தான் ரைடின் மூலம் முதல் புள்ளியைப் பெற்றார். அதேநேரத்தில் தொடர்ந்து அபாரமாக ஆடிய புணேரி பால்டான் 30-15 என்ற கணக்கில் முன்னிலை பெற, அப்போதே பெங்கால் அணியின் படுதோல்வி உறுதியாகிவிட்டது. இறுதியில் புணேரி பால்டான் 34-17 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி கண்டது.
பெங்கால் வீரர் மணீந்தர் சிங் ரைடின் மூலம் 6 புள்ளிகளைப் பெற்றபோதிலும், அவரால் தனது அணியை தோல்வியிலிருந்து காப்பாற்ற முடியவில்லை.
குஜராத் வெற்றி: மற்றொரு ஆட்டத்தில் குஜராத் பார்ச்சூன்ஜயன்ட்ஸ் அணி 27-24 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணியைத் தோற்கடித்தது.

இன்றைய ஆட்டங்கள்
ஹரியாணா ஸ்டீலர்ஸ்- தமிழ் தலைவாஸ்
நேரம்: இரவு 8
குஜராத் பார்ச்சூன்ஜயன்ட்ஸ்-தெலுகு டைட்டன்ஸ்
நேரம்: இரவு 9
இடம்: ஆமதாபாத்
நேரடி ஒளிபரப்பு:
ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com