சின்சினாட்டி மாஸ்டர்ஸ்: 3-ஆவது சுற்றில் இஸ்னர், சைமோனா

சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் ஜான் இஸ்னர், ருமேனியாவின் சைமோனா ஹேலப் உள்ளிட்டோர் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
சின்சினாட்டி மாஸ்டர்ஸ்: 3-ஆவது சுற்றில் இஸ்னர், சைமோனா

சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் ஜான் இஸ்னர், ருமேனியாவின் சைமோனா ஹேலப் உள்ளிட்டோர் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-ஆவது சுற்றில் ஜான் இஸ்னர் 6-3, 6-3 என்ற நேர் செட்களில் சகநாட்டவரான டாமி பாலை தோற்கடித்தார்.
குரோஷியாவின் இவா கார்லோவிச் 6-4, 7-6 (9) என்ற நேர் செட்களில் பிரான்ஸின் ஜோ வில்பிரைட் சோங்காவையும், ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் 6-3, 6-2 என்ற நேர் செட்களில் இத்தாலியின் பாபியோ பாக்னினியையும் தோற்கடித்தனர்.
ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றில் ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸ் 6-2, 6-3 என்ற நேர் செட்களில் பெல்ஜியத்தின் டேவிட் கோபினையும், ஸ்பெயினின் டேவிட் ஃபெடரர் 6-1, 5-7 6-3 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஸ்டீவ் ஜான்சனையும் தோற்கடித்தனர்.
செக்.குடியரசின் தாமஸ் பெர்டிச், ஸ்பெயினின் ராபர்ட்டோ பெளதிஸ்டா ஆகியோர் அதிர்ச்சித் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினர்.
மகளிர் பிரிவு: மகளிர் ஒற்றையர் 2-ஆவது சுற்றில் ருமேனியாவின் சைமோனா ஹேலப் 6-4, 6-1 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் டெய்லர் டெளன்சென்டை வீழ்த்தி 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினார். பிரிட்டனின் ஜோஹன்னா கோன்டா 6-3, 6-3 என்ற நேர் செட்களில் நெதர்லாந்தின் கிகி பெர்டென்ஸையும், ஸ்பெயினின் கார்பைன் முகுருஸா 6-2, 6-0 என்ற நேர் செட்களில் பிரேசிலின் பீட்ரிஸையும் தோற்கடித்து 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.
மகளிர் ஒற்றையர் முதல் சுற்றில் போலந்தின் அக்னீஸ்கா ரத்வன்ஸ்கா 4-6, 4-6 என்ற நேர் செட்களில் ஜெர்மனியின் ஜூலியா ஜார்ஜஸிடம் அதிர்ச்சித் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார். அதேநேரத்தில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் 6-2, 6-0 என்ற நேர் செட்களில் சகநாட்டவரான அலிசன் ரிஸ்கேவையும், ஸ்லோவேகியாவின் டொமினிகா சிபுல்கோவா 5-7, 7-5, 6-2 என்ற செட் கணக்கில் குரோஷியாவின் அனா கொஞ்ஜூவையும் வீழ்த்தி 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.
பயஸ் ஜோடி தோல்வி
ஆடவர் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ஜோடி 6-2, 6-7 (2), 6-10 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் பெலிஸியானோ லோபஸ்-மார்க் லோபஸ் ஜோடியிடம் தோல்வி கண்டது.
மற்றொரு இந்திய வீரரான ரோஹன் போபண்ணா, குரோஷியாவின் இவான் டோடிக்குடன் இணைந்து ஆடுகிறார். இந்த ஜோடி தரவரிசை அடிப்படையில் நேரடியாக 2-ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com