டிஎன்பிஎல்: கோவை 139 ரன்கள் சேர்ப்பு

தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது தகுதிச் சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த கோவை கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு
ரோஹித்தை வீழ்த்திய மகிழ்ச்சியில் சாய் கிஷோர்.
ரோஹித்தை வீழ்த்திய மகிழ்ச்சியில் சாய் கிஷோர்.

தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது தகுதிச் சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த கோவை கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் சேர்த்தது.
திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கோவை கிங்ஸ் அணி, சூப்பர் கில்லீஸ் அணியின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் விரைவாக விக்கெட்டுகளை இழந்தது. இதனால் அந்த அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக ஹரீஷ் குமார் 19 பந்துகளில் 32, முகமது 25 பந்துகளில் 30, கேப்டன் முரளி விஜய் 21 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தனர். சூப்பர் கில்லீஸ் தரப்பில் சாய் கிஷோர், அலெக்சாண்டர், அந்தோணி தாஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
மழையால் பாதிப்பு: பின்னர் ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் கோபிநாத் 12 ரன்களில் ஆட்டமிழக்க, தலைவன் சற்குணத்துடன் ஜோடி சேர்ந்தார் எஸ்.கார்த்திக். இந்த ஜோடி அசத்தலாக ஆட, சூப்பர் கில்லீஸ் அணி வெற்றியை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது.
அந்த அணி 11 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்திருந்துபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது சற்குணம் 33, கார்த்திக் 38 ரன்களுடன் களத்தில் இருந்தனர். சூப்பர் கில்லீஸ் அணி வெற்றி பெற 9 ஓவர்களில் 47 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com