சின்சினாட்டி மாஸ்டர்ஸ்: நடாலை வீழ்த்தினார் கிர்ஜியோஸ்

சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் அதிர்ச்சித் தோல்வி கண்டு வெளியேறினார்.
சின்சினாட்டி மாஸ்டர்ஸ்: நடாலை வீழ்த்தினார் கிர்ஜியோஸ்

சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் அதிர்ச்சித் தோல்வி கண்டு வெளியேறினார்.
அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த நடால் 2-6, 5-7 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸிடம் தோல்வி கண்டார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் செட்டில் நடாலின் முதல் இரு சர்வீஸ்களையும் முறியடித்த கிர்ஜியோஸ், 4-0 என முன்னிலை பெற்றார். தொடர்ந்து அபாரமாக ஆடிய அவர், 25 நிமிடங்களில் முதல் செட்டை முடிவுக்கு கொண்டு வந்தார்.
பின்னர் நடைபெற்ற 2-ஆவது செட்டின் ஆரம்பத்திலேயே நடாலின் சர்வீûஸ முறியடித்த கிர்ஜியோஸ், 3-2 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். ஆனால் 10-ஆவது கேமில் கிர்ஜியோஸ் இரட்டை தவறிழைத்தார். அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட நடால், கிர்ஜியோஸின் சர்வீûஸ முறியடிக்க, இருவரும் 5-5 என்ற கணக்கில் சமநிலையை எட்டினர். ஆனால் அடுத்த கேமிலேயே நடாலின் சர்வீûஸ முறியடித்த கிர்ஜியோஸ், தனது 10-ஆவது ஏஸ் சர்வீûஸ விளாசி, 2-ஆவது செட்டை 7-5 என்ற கணக்கில் கைப்பற்றி வெற்றி கண்டார். இதுவரை நடாலுடன் இரு முறை மோதியுள்ள கிர்ஜியோஸ், அந்த இரண்டிலுமே வாகை சூடியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டம் 1 மணி நேரம், 10 நிமிடங்கள் நடைபெற்றது.
கிர்ஜியோஸ் தனது அரையிறுதியில் ஸ்பெயினின் டேவிட் ஃபெரரை சந்திக்கிறார். ஃபெரர் தனது காலிறுதியில் 6-3, 6-3 என்ற நேர் செட்களில் ஆஸ்திரியாவின் டொமினிக் தீமை தோற்கடித்தார். மற்றொரு அரையிறுதியில் அமெரிக்காவின் ஜான் இஸ்னரும், பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவும் சந்திக்கின்றனர். ஜான் இஸ்னர் தனது காலிறுதியில் 7-6 (4), 7-5 என்ற நேர் செட்களில் சகநாட்டவரான ஜேர்டு டொனால்டுசனை தோற்கடித்தார். இந்த ஆட்டத்தில் இஸ்னர் 25 ஏஸ் சர்வீஸ்களை விளாசினார்.
மற்றொரு காலிறுதியில் கிரிகோர் டிமிட்ரோவ் 6-2, 6-1 என்ற நேர் செட்களில் ஜப்பானின் யூச்சி சுகிதாவை வீழ்த்தினார்.
பிளிஸ்கோவா-முகுருஸா மோதல்: மகளிர் ஒற்றையர் பிரிவைப் பொறுத்தவரையில் உலகின் முதல் நிலை வீராங்கனையான செக்.குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா தனது காலிறுதியில் 6-2, 6-4 என்ற நேர் செட்களில் டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கியை வீழ்த்தினார்.
பிளிஸ்கோவா தனது அரையிறுதியில் ஸ்பெயினின் கார்பைன் முகுருஸாவை சந்திக்கிறார். போட்டித் தரவரிசையில் 6-ஆவது இடத்தில் இருக்கும் முகுருஸா தனது காலிறுதியில் 6-2, 5-7, 7-5 என்ற செட் கணக்கில் ரஷியாவின் ஸ்வெட்லானா குஸ்நெட்சோவாவை தோற்கடித்தார். மற்றொரு அரையிறுதியில் உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையான சைமோனா ஹேலப்பும், அமெரிக்காவின் வைல்ட்கார்டு வீராங்கனையான ஸ்லோனே ஸ்டீபன்ஸூம் மோதுகின்றனர்.
சைமோனா தனது காலிறுதியில் 6-4, 7-6 (1) என்ற நேர் செட்களில் பிரிட்டனின் ஜோஹன்னா கோன்டாவை வீழ்த்தினார்.


போபண்ணா, சானியா ஜோடிகள் தோல்வி

ஆடவர் இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா-குரோஷியாவின் இவான் டோடிக் ஜோடி 1-6, 7-6 (5), 7-10 என்ற செட் கணக்கில் போலந்தின் லூகாஸ் குபோட்-பிரேசிலின்
மார்செலோ மெலோ ஜோடியிடம் தோல்வி கண்டது.
மகளிர் இரட்டையர் அரையிறுதியில் இந்தியாவின் சானியா மிர்ஸா-சீனாவின் பெங் ஷுவாய் ஜோடி 4-6, 6-7 (6) என்ற நேர் செட்களில் சீன தைபேவின் ஷி சூ வெய்-ருமேனியாவின் மோனிகா நிகுலெஸ்கு ஜோடியிடம் தோற்று போட்டியிலிருந்து வெளியேறியது.

3 ஆண்டுகளுக்குப் பிறகு

சின்சினாட்டி மாஸ்டர்ஸ் போட்டியிலிருந்து ரோஜர் ஃபெடரர் விலகிய நிலையில், அதே போட்டியில் காலிறுதி வரை முன்னேறிய ஸ்பெயினின் ரஃபேல் நடால் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை எட்டியிருக்கிறார்.
திங்கள்கிழமை புதிய தரவரிசை வெளியாகும்போது நடால் அதிகாரப்பூர்வமாக முதலிடத்தைப் பிடித்ததாக அறிவிக்கப்படுவார்.
இது குறித்துப் பேசிய நடால், "கடந்த சில ஆண்டுகளாக பின்னடைவை சந்தித்த நிலையில், இப்போது மீண்டும் முதலிடத்தைப் பிடித்திருப்பது வியப்பாக இருக்கிறது. என்னை பொறுத்தவரையில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியிருப்பது ஆச்சர்யமிக்க சாதனையாகும். ஆண்டின் கடைசிப் போட்டியான அமெரிக்க ஓபனுக்கு முன்னதாக முதலிடத்தைப் பிடித்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது' என்றார். கடைசியாக 2014 ஜூலையில் தரவரிசையில் முதலிடத்தில் இருந்தார் நடால்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com