முதல் டெஸ்ட்: மே.இ.தீவுகள் "பாலோ-ஆன்'

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 47 ஓவர்களில் 168 ரன்களுக்கு சுருண்டது.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 47 ஓவர்களில் 168 ரன்களுக்கு சுருண்டது.
இதையடுத்து "பாலோ-ஆன்' பெற்று 2-ஆவது இன்னிங்ûஸ ஆடிய அந்த அணி 5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணி இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க 329 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது.
பர்மிங்காமில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 135.5 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 514 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அலாஸ்டர் குக் 243 ரன்களும், கேப்டன் ஜோ ரூட் 136 ரன்களும் குவித்தனர்.
மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ரோஸ்டான் சேஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து முதல் இன்னிங்ûஸ ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 16 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 44 ரன்கள் எடுத்திருந்தது.
3-ஆவது நாளான சனிக்கிழமை தொடர்ந்து ஆடிய அந்த அணி, இங்கிலாந்தின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் 47 ஓவர்களில் 168 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக பிளாக்வுட் ஆட்டமிழக்காமல் 76 பந்துகளில் 2 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 79 ரன்கள் குவித்தார். இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 346 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகளுக்கு "பாலோ-ஆன்' கொடுத்தது. அதைத் தொடர்ந்து 2-ஆவது இன்னிங்ûஸ ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் எடுத்திருந்தது. பிரத்வெயிட் 4, ஷாய் ஹோப் 2 ரன்களுடன் களத்தில் இருந்தனர். முன்னதாக பாவெல் 10 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com