உலக பாட்மிண்டன்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சிந்து

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, மகளிர் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
உலக பாட்மிண்டன்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சிந்து

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, மகளிர் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் செவ்வாய்க்கிழமை, தனது 2-ஆவது சுற்றில் தென் கொரியாவின் கிம் ஹியோ மின்னை எதிர்கொண்ட சிந்து, 21-16, 21-14 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இருவருக்கும் இடையேயான இந்த ஆட்டம் 49 நிமிடங்கள் நீடித்தது. இதுவரை கிம் ஹியோவை 5 முறை சந்தித்துள்ள சிந்து 4 வெற்றிகளை பெற்றுள்ளார்.
சிந்து தனது அடுத்த சுற்றில், ரஷியாவின் எவ்ஜினியா கொஸட்ஸ்கயா அல்லது ஹாங்காங்கின் செங் கான் யீயை சந்திக்கவுள்ளார்.
இதனிடையே, ஆடவர் ஒற்றையர் பிரிவில், போட்டித் தரவரிசையில் 15-ஆவது இடத்தில் இருக்கும் சாய் பிரணீத் தனது முதல் சுற்றில் ஹாங்காங்கின் வெய் நானை எதிர்கொண்டார் . இருவருக்கும் இடையே 48 நிமிடங்கள் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முடிவில் சாய் பிரணீத் 21-18, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
இதையடுத்து அவர் தனது 2-ஆவது சுற்றில், இந்தோனேஷியாவின் அந்தோணி சினிசுகாவை சந்திக்கவுள்ளார்.
இதேபோல், கலப்பு இரட்டையர் பிரிவில் போட்டித் தரவரிசையில் 15-ஆவது இடத்தில் இருக்கும் இந்தியாவின் பிரணவ் ஜெர்ரி சோப்ரா-சிக்கி ரெட்டி ஜோடி தனது முதல் சுற்றில், இந்தியாவின் பிரஜக்தா சாவந்த்-மலேசியாவின் யோகேந்திரன் கிருஷ்ணன் ஜோடியை 21-12, 21-19 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது.
கலப்பு இரட்டையர் பிரிவில் மற்றொரு இந்திய ஜோடியான சுமீத் ரெட்டி-அஸ்வினி பொன்னப்பா ஜோடி, 17-21, 21-18, 5-21 என்ற செட் கணக்கில் சீனாவின் வாங் யிலியு-ஹுவாங் டாங்பிங் ஜோடியிடம் வீழ்ந்தது. அதேபோல், சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி-மணீஷா ஜோடி 20-22, 18-21 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் மேத்தியாஸ் கிறிஸ்டியான்சென்-சாரா தைகெசன் ஜோடியிடம் வீழ்ந்தது.
இதனிடையே, மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ரிதுபர்னா தாஸை எதிர்கொண்ட, ஃபின்லாந்தின் ஆய்ரிமிக்கெல்லா காயம் காரணமாக விலகியதை அடுத்து, ரிதுபர்னா வென்றதாக அறிவிக்கப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com