ஒருநாள் போட்டியில் அரை சதம் எடுப்பேன் என கனவிலும் நினைத்ததில்லை: புவனேஸ்வர் குமார்

ஒருநாள் போட்டியில் அரை சதம் எடுப்பேன் எனக் கனவிலும் நினைத்ததில்லை என்று இந்திய வேகப்பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார் கூறியுள்ளார்... 
ஒருநாள் போட்டியில் அரை சதம் எடுப்பேன் என கனவிலும் நினைத்ததில்லை: புவனேஸ்வர் குமார்

ஒருநாள் போட்டியில் அரை சதம் எடுப்பேன் எனக் கனவிலும் நினைத்ததில்லை என்று இந்திய வேகப்பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார் கூறியுள்ளார்.

இலங்கைக்கு எதிரான 2-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்தியா. ஒரு கட்டத்தில் இந்திய அணி 21.5 ஓவர்களில் 131 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் இந்தியா தோற்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 7-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த தோனியும், புவனேஸ்குமாரும் அபாரமாக ஆடி வெற்றி தேடித்தந்தனர். இந்த ஜோடி 100 ரன்கள் சேர்த்தது. இதுதான் 8-ஆவது விக்கெட்டுக்கு இந்தியா எடுத்த அதிகபட்ச ரன். புவனேஸ்வர் குமார் 80 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 53, தோனி 68 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இலங்கையின் பல்லகெலே நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் சேர்த்தது. இந்தியத் தரப்பில் ஜஸ்பிரித் பூம்ரா 4 விக்கெட்டுகளையும், யுவேந்திர சாஹல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்தியா பேட் செய்வதற்கு முன்பு மழை பெய்தது. இதன்காரணமாக டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இந்தியாவுக்கு 47 ஓவர்களில் 231 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டன. இந்தியா 44.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. புவனேஸ்வர் குமார் 53, தோனி 45 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இலங்கைத் தரப்பில் தனஞ்ஜெயா 10 ஓவர்களில் 54 ரன்களைக் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

இந்த ஆட்டம் குறித்து புவனேஸ்வர் குமார் கூறியதாவது:

ஒருநாள் போட்டியில் அரை சதம் எடுப்பேன் என கனவிலும் நினைத்ததில்லை. அரை சதம் மட்டுமல்லாமல் வெற்றிகரமான ஆட்டத்தையும் வெளிப்படுத்துவேன் என எதிர்பார்த்ததில்லை. ஏனெனில் ஒருநாள் போட்டிகள் எனது பேட்டிங் தன்மைக்கு மாறானது. என்னால் பெரிய சிக்ஸர்களை அடிக்கமுடியாது. ஆனால் இந்தப் போட்டியில் டெஸ்ட் ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய சூழல் இருந்ததால் எனக்கும் வசதியாக இருந்தது. தனஞ்ஜெயாவின் பந்துவீச்சை முதல் எதிர்கொள்வது சிரமமாக இருந்தது. அவர் ஆஃப் ஸ்பின்னராக இருந்தாலும் லெக் ஸ்பின்னர், கூக்ளி வகைப் பந்துகளை வீசியதால் எங்கள் அணிக்கு எதிர்பாராதவிதத்தில் அமைந்தது. 10-15 பந்துகளை எதிர்கொண்டபிறகு அவருடைய பந்துவீச்சைக் கணிப்பது சுலபமாக இருந்தது. 

நான் களத்தில் நுழைந்தபோது என்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தச் சொன்னார் தோனி. அதாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்படி விளையாடுவேனோ அதேபோல. நிறைய ஓவர்கள் மீதமிருந்ததால் அழுத்தத்துடன் விளையாடவில்லை. முழு ஓவர்களையும் ஆடினால் நாம்தான் வெற்றி பெறுவோம் என்பதால் தோனியுடன் ஆதரவுடன் கவனமாக விளையாடினேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com