அமெரிக்க ஓபன்: அரையிறுதியில் ஃபெடரர்-நடால் மோத வாய்ப்பு

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதியில் உலகின் முதல் நிலை வீரரான ரஃபேல் நடாலும், மூன்றாம் நிலை வீரரான ரோஜர் ஃபெடரரும் மோத வாய்ப்புள்ளது.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதியில் உலகின் முதல் நிலை வீரரான ரஃபேல் நடாலும், மூன்றாம் நிலை வீரரான ரோஜர் ஃபெடரரும் மோத வாய்ப்புள்ளது.

ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் திங்கள்கிழமை தொடங்குகிறது. அதற்கான டிரா (யாருடன் யார் மோதுவது என்பதை குலுக்கல் முறையில் தீர்மானிப்பது) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அதன்படி அரையிறுதியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர்
ஃபெடரரும், ஸ்பெயினின் ரஃபேல் நடாலும் சந்திக்க வாய்ப்புள்ளது. நடால் தனது முதல் சுற்றில் செர்பியாவின் துஸான் லஜோவிச்சை சந்திக்கிறார். நடால் தனது 3-ஆவது சுற்றில் பிரான்ஸின் ரிச்சர்ட் காஸ்கட்டையும், 4-ஆவது சுற்றில் செக்.குடியரசின் தாமஸ் பெர்டிச்சையும், காலிறுதியில் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவையும் சந்திக்க வாய்ப்புள்ளது.
ஃபெடரர் தனது முதல் சுற்றில் அமெரிக்காவின் பிரான்செஸ் டியாஃபோவை சந்திக்கிறார். ஃபெடரர் தனது 4-ஆவது சுற்றில் ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோûஸயும், காலிறுதியில் ஆஸ்திரியாவின் டொமினிக் தீமையும் சந்திக்க வாய்ப்புள்ளது.
மற்றொரு அரையிறுதியில் போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருக்கும் பிரிட்டனின் ஆன்டி முர்ரேவும், போட்டித் தரவரிசையில் 5-ஆவது இடத்தில் இருக்கும் குரோஷியாவின் மரின் சிலிச்சும் மோத வாய்ப்புள்ளது. முர்ரே தனது முதல் சுற்றில் அமெரிக்காவின் டென்னிஸ் சேன்ட்கிரெனுடன் மோதுகிறார். காலிறுதியில் முர்ரேவும், பிரான்ஸின் ஜோ வில்பிரைட் சோங்காவும் சந்திக்க வாய்ப்புள்ளது.
மரின் சிலிச் தனது முதல் சுற்றில் பிரான்ஸின் ஜில்ஸ் சைமனை சந்திக்கிறார். சிலிச் தனது காலிறுதியில் போட்டித் தரவரிசையில் 4-ஆவது இடத்தில் உள்ள ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.
உலகின் முன்னணி வீரர்களான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா, ஜப்பானின் நிஷிகோரி, கனடாவின் மிலோஸ் ரயோனிச் ஆகியோர் காயம் காரணமாக அமெரிக்க ஓபனில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மகளிர் பிரிவு: முதல் சுற்றில் ஹேலப்பை சந்திக்கிறார் ஷரபோவா

மகளிர் ஒற்றையர் பிரிவைப் பொறுத்தவரையில் வைல்ட்கார்டு வீராங்கனையான மரியா ஷரபோவா தனது முதல் சுற்றில் உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சைமோனா ஹேலப்பை சந்திக்கிறார்.
5 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றவரான ரஷியாவின் மரியா ஷரபோவா, ஊக்கமருந்து பயன்படுத்தியதன் காரணமாக 18 மாதங்கள் தடை விதிக்கப்பட்டது. தடைக்குப் பிறகு டென்னிஸýக்கு திரும்பிய ஷரபோவா, இப்போது வைல்ட்கார்டு வீராங்கனையாக களமிறங்குகிறார். ஷரபோவாவும், சைமோனாவும் இதுவரை 6 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். அவையனைத்திலும் ஷரபோவாவே வெற்றி கண்டுள்ளார்.
மகளிர் பிரிவு டிராவைப் பொறுத்தவரையில் ஒரு காலிறுதியில் உலகின் முதல் நிலை வீராங்கனையான செக்.குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவும், ரஷியாவின் ஸ்வெட்லானா குஸ்நெட்சோவாவும் மோத வாய்ப்புள்ளது. மற்றொரு காலிறுதியில் ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பரும், உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினாவும் மோத வாய்ப்புள்ளது.
மற்றொரு காலிறுதியில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸýம், ஸ்பெயினின் கார்பைன் முகுருஸாவும் மோத வாய்ப்புள்ளது. இன்னொரு காலிறுதியில் பிரிட்டனின் ஜோஹன்னா கோன்டாவும், ருமேனியாவின் சைமோனா ஹேலப்பும் மோதலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com