சதமடித்தாலும் அசராமல் விளையாடும் ரோஹித் சர்மா! சாதனை விவரங்கள்!

ரோஹித் சர்மாவின் கடைசி 10 சதங்கள் அனைத்துமே 120 ரன்களுக்கு மேல் எடுத்தவை...
சதமடித்தாலும் அசராமல் விளையாடும் ரோஹித் சர்மா! சாதனை விவரங்கள்!

இலங்கைக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா. இதன்மூலம் 3-வது வெற்றியைப் பெற்றிருக்கும் இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றதோடு, தொடரையும் கைப்பற்றியுள்ளது.

இலங்கையின் பல்லகெலேவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 45.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. தொடக்க வீரர் ரோஹித் சர்மா 145 பந்துகளில் 2 சிக்ஸர், 16 பவுண்டரிகளுடன் 124, தோனி 86 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ரோஹித் சர்மாவின் கடைசி 10 சதங்கள் அனைத்துமே 120 ரன்களுக்கு மேல் எடுத்தவை. சதமடித்தாலும் தொடர்ந்து விளையாடி அணிக்குப் பங்களிப்பதால் அவர் ஒவ்வொருமுறை சதமடிக்கும்போது எதிரணியினர் அச்சமடைகிறார்கள்.

ரோஹித் சர்மாவின் கடைசி 10 சதங்கள்

141*
209
264
138
137
150
171*
124
123*
122*

* கடந்த 4 வருடங்களில் ரோஹித் சர்மாவின் சதங்கள் அனைத்தும் 120 ரன்களுக்கு மேல் எடுத்தவை. இந்தக் காலகட்டங்களில் ஆம்லா, கோலி, வார்னர் ஆகியோர் 120 + ரன்களை 7 முறை எடுத்துள்ளார்கள். 

இலங்கையில் ரோஹித் சர்மா

- கடைசி இரு ஒருநாள் போட்டிகள்: ஒரு அரை சதம் மற்றும் ஒரு சதம்
- அதற்கு முந்தைய 15 ஒருநாள் போட்டிகள்: மொத்தமாக 37 ரன்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com