20-வது சதம்: ஒரே நாளில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ள விராட் கோலி!

மூன்று டெஸ்டுகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒவ்வொரு டெஸ்டிலும் சதங்கள் அடித்த முதல் கேப்டன் - கோலி...
20-வது சதம்: ஒரே நாளில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ள விராட் கோலி!

இந்திய கேப்டன் விராட் கோலி, தனது 20-வது டெஸ்ட் சதத்தை இன்று பதிவு செய்துள்ளார். இதன்மூலம் ஒரே நாளில் அவர் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். 

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் ஆட்டம் தில்லி ஃபெரேஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

முதலில் விஜய் சதமடிக்க, அதன்பின்பு விராட் கோலியும் சதமடித்து ரசிகர்களைக் குஷிப்படுத்தினார். இது அவருடைய 20-வது டெஸ்ட் சதமாகும். 

குறைந்த இன்னிங்ஸில் 20 டெஸ்ட் சதங்கள் 

55 இன்னிங்ஸ் - பிராட்மேன் 
93 இன்னிங்ஸ் - கவாஸ்கர் 
95 இன்னிங்ஸ் - ஹேடன்
99 இன்னிங்ஸ் - ஸ்டீவன் ஸ்மித் 
105 இன்னிங்ஸ் - விராட் கோலி 

அடுத்தடுத்த இன்னிங்ஸில் அதிக சதங்கள் எடுத்த இந்திய கேப்டன்கள் 

3 - கோலி - ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2014/15
3* - கோலி, இலங்கைக்கு எதிராக, 2017/18
2 - ஹசாரே, கவாஸ்கர், அசாருதீன், சச்சின், டிராவிட்.

* மூன்று டெஸ்டுகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒவ்வொரு டெஸ்டிலும் சதங்கள் அடித்த முதல் கேப்டன் - கோலி. 

* 2 முறை தொடர்ச்சியாக 3 இன்னிங்ஸில் சதங்கள் அடித்த முதல் கேப்டன் - கோலி.

* 2002-ல் டிராவிட் தொடர்ச்சியாக 3 இன்னிங்ஸில் சதமெடுத்தார். அதன்பிறகு இப்போதுதான் கோலி தொடர்ச்சியாக 3 இன்னிங்ஸிலும் சதமெடுத்துள்ளார்.

கேப்டனாக கோலி 

டெஸ்டுகள் - 50 இன்னிங்ஸில் 13 சதங்கள்
ஒருநாள் போட்டிகள் - 40 இன்னிங்ஸில் 10 சதங்கள்

கோலி இன்று:

52 பந்துகளில் அரை சதம்: கோலியின் அதிவேக டெஸ்ட் அரை சதம்

110 பந்துகளில் சதம்: கோலியின் அதிவேக டெஸ்ட் சதம்

* கோலியின் கடைசியாக எடுத்த ஆறு அரை சதங்களும் சதங்களாக மாறியுள்ளன. அதில் மூன்று இரட்டைச் சதங்கள்!

கோலியின் ஆறு 50+ ஸ்கோர்கள்

235
204
103*
104*
213
100* (பேட்டிங்)

* இந்த வருடம் இலங்கை அணிக்கு எதிராக 22 டெஸ்ட் சதங்கள் எடுக்கப்பட்டுள்ளன. 1984-ல் இங்கிலாந்து அணிக்கு எதிராக 22 சதங்கள் எடுக்கப்பட்டன. அச்சாதனையை இலங்கை அணி சமன் செய்துள்ளது!

 31-வது ஓவரின்போது 24 ரன்களில் ஆடிக்கொண்டிருந்த கோலி, பவுண்டரி அடித்தார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 5000 ரன்களை அவர் கடந்தார். இந்த இலக்கை எட்டும் 11-வது இந்தியர் என்கிற பெருமையை கோலி பெற்றுள்ளார். 105 இன்னிங்ஸில் எடுத்துள்ளார்.  

அதேபோல 42 ரன்களில் இருந்தபோது சர்வதேச கிரிக்கெட்டில் 16000 ரன்களைப் பூர்த்தி செய்தார் கோலி. மற்ற அனைத்து வீரர்களை விடவும் மிகவிரைவாக 350 இன்னிங்ஸில் இந்த ரன்களை எடுத்து சாதனை செய்துள்ளார்.

அதிவேக 5000 டெஸ்ட் ரன்கள்

ஸ்மித் - 97 இன்னிங்ஸ்
கோலி, ரூட் - 105 இன்னிங்ஸ்
ஆம்லா, வார்னர் - 109 இன்னிங்ஸ்
வில்லியம்சன் - 110

அதிவேக 5000 டெஸ்ட் ரன்கள் - இந்தியர்கள்

கவாஸ்கர் -  95 இன்னிங்ஸ்
சேவாக் - 98 இன்னிங்ஸ்
டெண்டுல்கர் - 103 இன்னிங்ஸ்
கோலி - 105 இன்னின்ங்ஸ்
டிராவிட் - 108 இன்னிங்ஸ்

அதிக டெஸ்ட் ரன்கள் - இந்தியர்கள்

சச்சின் - 15921 ரன்கள்
டிராவிட் - 13265 ரன்கள்
கவாஸ்கர் - 10122 ரன்கள்
லக்‌ஷ்மண் - 8781 ரன்கள்
சேவாக் - 8503 ரன்கள்
கங்குலி - 7212 ரன்கள்
வெங்சர்கார் - 6868 ரன்கள்
அசாருதீன் - 6215 ரன்கள்
விஸ்வநாத் - 6080 ரன்கள்
கபில் தேவ் - 5248 ரன்கள்
கோலி - 5000 ரன்கள்*

அதிவேக 16000 ரன்கள்

விராட் கோலி - 350 இன்னிங்ஸ்
ஆம்லா - 363 இன்னிங்ஸ்
டெண்டுல்கர் - 376 இன்னிங்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com