71 பந்துகளில் சதம்; நியூஸி. 313 ரன்கள் முன்னிலை: நெருக்கடியில் மே.இ. அணி!

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சோகம் இரண்டாவது நாளாகத் தொடர்கிறது...
71 பந்துகளில் சதம்; நியூஸி. 313 ரன்கள் முன்னிலை: நெருக்கடியில் மே.இ. அணி!

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சோகம் இரண்டாவது நாளாகத் தொடர்கிறது.

நியூஸிலாந்துக்குச் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளது மே.இ. அணி. 2 டெஸ்டுகள் கொண்ட டெஸ்ட் தொடர் நேற்று தொடங்கியது. வெல்லிங்டனில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. மே.இ. அணி தனது முதல் இன்னிங்ஸில் 45.4 ஓவர்களில் 134 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்பிறகு தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூஸிலாந்து, முதல் நாளின் முடிவில் 38 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 85 ரன்கள் எடுத்தது. ரவல் 29, டெய்லர் 12 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

இன்றாவது மே.இ. அணி நியூஸிலாந்து அணிக்கு நெருக்கடி தந்து மீண்டு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று பந்துவீச்சில் அசத்திய நியூஸி. அணி இன்று பேட்டிங்கில் மேலும் அசத்தி மே.இ. அணிக்கு மேலும் நெருக்கடி அளித்தது. ஆல்ரவுண்டர் டி கிராண்ட்ஹோம் 71 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 11 பவுண்டரிகளுடன் சதமெடுத்து அசத்தினார். அவர் 105 ரன்களில் ஆட்டமிழந்தார். டெய்லர் 93, ப்ளண்டல் 57 ரன்கள் எடுத்துள்ளார்கள். 

2-வது நாளின் நியூஸிலாந்து அணி 127 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 447 ரன்கள் எடுத்துள்ளது. ப்ளண்டல் 57, போல்ட் 2 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். இன்று மட்டும் நியூஸிலாந்து அணி 362 ரன்கள் குவித்துள்ளது. முதல் இன்னிங்ஸில் 1 விக்கெட் மீதமுள்ள நிலையில் நியூஸிலாந்து அணி 313 ரன்கள் முன்னிலை பெற்று இந்த டெஸ்ட் போட்டியை வெல்லும் நிலைமையில் உள்ளது. மே.இ. அணியை 3-வது நாளிலேயே வீழ்த்தும் என்றும் கணிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com