கால்பந்து உலகக் கோப்பை: முதல் போட்டியில் சவுதி அரேபியாவை எதிர்கொள்ளும் ரஷ்யா!

ஜுன் 14 அன்று மாஸ்கோவில் நடைபெற்ற முதல் போட்டியில் ரஷ்யாவும் சவுதி அரேபியாவும் மோதவுள்ளன...
கால்பந்து உலகக் கோப்பை: முதல் போட்டியில் சவுதி அரேபியாவை எதிர்கொள்ளும் ரஷ்யா!

2018 கால்பந்து உலகக் கோப்பைப் போட்டி ரஷ்யாவில் ஜுன் 14 முதல் ஜுலை 15 வரை நடைபெறவுள்ளது. இப்போட்டியில் 32 அணிகள் பங்கேற்கின்றன. இந்தப் போட்டிக்கான பரிசுத்தொகை ரூ. 2602 கோடி. அதாவது 400 மில்லியன் டாலர். இது கடந்த உலகக் கோப்பைப் போட்டியின் பரிசுத்தொகையை விடவும் 12 சதவிகிதம் அதிகம்.

இந்நிலையில் இப்போட்டியில் பங்குபெறும் 32 அணிகளும் எந்தப் பிரிவில் இடம்பெற்றுள்ளன என்கிற தகவல் நேற்று வெளியிடப்பட்டது. போட்டியில் பங்கேற்கும் 32 அணிகளும் 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் குரூப் ஏ பிரிவில் ரஷ்யா, சவுதி அரேபியா, எகிப்து, உருகுவே ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. அர்ஜெண்டினா குரூப் டி பிரிவிலும் பிரேஸில் குரூப் ஈ பிரிவிலும் ஜெர்மனி குரூப் எஃப் பிரிவிலும் இடம்பெற்றுள்ளன. 8 பிரிவுகளில் குரூப் ஹெச்-சில் உள்ள நான்கு அணிகளில் ஒன்றுகூட (போலந்து, செனகல், கொலம்பியா, ஜப்பன்) இதற்கு முன்பு உலக சாம்பியன் ஆனதில்லை.

ஜுன் 14 அன்று மாஸ்கோவில் நடைபெற்ற முதல் போட்டியில் ரஷ்யாவும் சவுதி அரேபியாவும் மோதவுள்ளன. உலகக் கோப்பைப் போட்டியின் முதல் நாளில் போட்டியிடும் முதல் ஆசிய அணி என்கிற பெருமை சவுதி அரேபியாவுக்குக் கிடைத்துள்ளது. அடுத்த நாள் 2010 சாம்பியன் ஸ்பெயினும் நடப்பு ஐரோப்பா சாம்பியன் போர்ச்சுக்கல்லும் மோதவுள்ளன. 

1986 முதல், உலகக் கோப்பைப் போட்டிகளில் பங்கேற்கும் அமெரிக்காவும் நான்குமுறை சாம்பியன் பட்டம் பெற்ற இத்தாலியும் இப்போட்டிக்குத் தகுதி பெறவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com