2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை

2018-ம் ஆண்டு நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை

2018-ம் ஆண்டுக்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடர்பாக சர்வதேச ஒலிம்பிக் ஆணையத்தின் பொதுக்கூட்டம் ஸ்விட்சர்லாந்தில் உள்ள லௌசானி என்ற இடத்தில் இருக்கும் தலைமையகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

அப்போது தென்கொரியாவின் பியாங்சாங் என்கிற இடத்தில் நடைபெறவுள்ள 2018-ம் ஆண்டுக்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை விதிக்கப்பட்டது. 

முன்னதாக, 2014-ம் ஆண்டில் சோசியில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் போது ரஷ்யா, தனது வீரர்களுக்கு ஊக்கமருத்து அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 

இதன்பின்னர் நடந்த விசாரணையில் ஊக்கமருத்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அந்த ஒலிம்பிக் போட்டிகளின் போது ரஷ்யா வென்ற பதக்கங்களின் மொத்த எண்ணிக்கையில் இருந்து ஊக்கமருந்து பயன்படுத்திய வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் 11 பதக்கங்கள் திரும்பப் பெறப்பட்டன.

இதனால் 2014 குளிர்கால ஒலம்பிக் போட்டிகளின் பட்டியலில் ரஷ்யா, முதலிடத்தில் இருந்து 4-ஆம் இடத்துக்கு சரிந்தது. இந்தக் காரணங்களுக்காக அடுத்து நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதில் இருந்து ரஷ்யாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com