ஆஷஸ் தொடர்: ஒரு போட்டிக்காக இங்கிலாந்து கேப்டனான மூயின் அலி!

இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் மூயின் அலி ஒரேயொரு போட்டிக்கான அந்த அணியின் கேப்டனாக வியாழக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆஷஸ் தொடர்: ஒரு போட்டிக்காக இங்கிலாந்து கேப்டனான மூயின் அலி!

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், காப்பா மைதானத்தில் நவம்பர் 23-ல் தொடங்கி நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது.

இதன்பின்னர் டிசம்பர் 2-ந் தேதி தொடங்கி நடந்த 2-ஆவது டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி 120 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், வருகிற 14-ந் தேதி பெர்த்தின் வாக்கா மைதானத்தில் 3-ஆவது டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. இதனிடையே நடைபெறும் 2 நாள் பயிற்சி ஆட்டத்துக்கு இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் மூயின் அலி, அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அணி விவரம்:

மூயின் அலி (கேப்டன்), ஜேக் பால், கேரி பேலன்ஸ், மேஸன் க்ரேன், டாம் குர்ரன், பென் டக்கெட், பென் ஃபோக்ஸ் (விக்கெட் கீப்பர்), கீடன் ஜென்னிங்ஸ், டேன் லாரன்ஸ், லியன் லிவிங்ஸ்டன், மார்க் உட்.

இனி வரும் 3 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றிபெற்றால் மட்டுமே தொடரைக் கைப்பற்ற முடியும் என்ற கட்டாயத்தில் இங்கிலாந்து அணி உள்ளது. மாறாக ஒரு போட்டியில் வென்றாலும் தொடரை வெல்லும் நிலையில் ஆஸ்திரேலியா இருக்கிறது.

எனவே இந்தப் பயிற்சிப் போட்டியை பயன்படுத்தி அடுத்த போட்டிகளுக்கு இங்கிலாந்து அணி புது யுத்திகளுடன் தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com