ஆஷஸ் டெஸ்ட்: ஆஸ்திரேலியா வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 2-ஆவது போட்டியில் ஆஸ்திரேலியா 120 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 5 போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரில்,
ஆஷஸ் டெஸ்ட்: ஆஸ்திரேலியா வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 2-ஆவது போட்டியில் ஆஸ்திரேலியா 120 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 5 போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரில், ஆஸ்திரேலியா 2-0 என முன்னிலை வகிக்கிறது.
அடிலெய்டில் சனிக்கிழமை தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச தீர்மானித்தது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 149 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 442 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ஷான் மார்ஷ் அதிகபட்சமாக 126 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் ஓவர்டன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து 76.1 ஓவர்களில் 227 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஓவர்டன் அதிகபட்சமாக 41 ரன்கள் எடுக்க, ஆஸ்திரேலிய தரப்பில் நாதன் லயன் அதிகமாக 4 விக்கெட்டுகள் எடுத்தார். இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 215 ரன்கள் முன்னிலையில் இருந்த ஆஸ்திரேலியா, 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கி 58 ஓவர்களில் 138 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஸ்டார்க் அதிகபட்சமாக 20 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆன்டர்சன் அதிகமாக 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பின்னர் 354 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு ஆடத் தொடங்கிய இங்கிலாந்து செவ்வாய்க்கிழமை முடிவில் 62 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், கடைசி நாள் ஆட்டத்தை ஜோ ரூட் 67, கிறிஸ் வோக்ஸ் 5 ரன்களுடன் தொடங்கினர். அதில் ரூட் மட்டும் அதிகபட்சமாக 67 ரன்கள் எடுத்தார். வோக்ஸ் 5, மொயீன் அலி 2, பேர்ஸ்டோவ் 36, ஓவர்டன் 7, ஸ்டுவர்ட் 8 ரன்களில் ஆட்டமிழக்க, 84.2 ஓவர்களில் 233 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து. ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டார்க் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அந்த அணியின் ஷான் மார்ஷ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com