குளிர்கால ஒலிம்பிக்: ரஷியாவுக்கு தடை

ஊக்கமருந்து குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள ரஷியா, எதிர்வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தடை விதித்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது

ஊக்கமருந்து குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள ரஷியா, எதிர்வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தடை விதித்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
2014 சோச்சி ஒலிம்பிக் போட்டியின்போது ரஷிய வீரர்/வீராங்கனைகள் பலர் அரசு அமைப்புகளின் ஆதரவுடன் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதுதொடர்பாக சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு (வாடா), சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி விசாரணைக் குழு ஆகியவை மேற்கொண்ட விசாரணையின் முடிவுகள் அதனை உறுதிப்படுத்தியுள்ளன.
அதையடுத்து ரஷியா மீதான இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சோச்சி ஒலிம்பிக்கின்போது ரஷிய விளையாட்டுத் துறை அமைச்சராகவும், தற்போது அந்நாட்டின் துணை பிரதமராகவும் இருக்கும் விடாலி முட்கோவுக்கு வாழ்நாள் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. எனினும், ஊக்கமருந்து குற்றச்சாட்டுக்கு ஆளாகாத ரஷிய வீரர்/வீராங்கனைகள் ஒலிம்பிக் கொடியின் கீழ் பொது வீரர்/வீராங்கனைகளாக பங்கேற்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அனுமதி வழங்கியுள்ளது. தென் கொரியாவில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com