ஒருநாள் தொடர்: இங்கிலாந்து அணியில் ஸ்டோக்ஸ்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இயான் மோர்கன் தலைமையிலான இந்த அணியில், தற்போது தடைக்காலத்தில் இருக்கும் பென் ஸ்டோக்ஸ் இடம்பிடித்துள்ளார்.
இரவு விடுதி ஒன்றில் நிகழ்ந்த தகராறில் தொடர்பு இருப்பதாக ஸ்டோக்ஸ் மீது குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து அதுதொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையடுத்து அவர் சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது.
இதனிடையே, இரவு விடுதி சம்பவத்தில் தொடர்புடைய அலெக்ஸ் ஹேல்ஸýம் ஒருநாள் தொடருக்கான அணியில் உள்ளார்.
இதுகுறித்து இங்கிலாந்து பயிற்சியாளர் டிரெவர் பேலிஸ் கூறுகையில், "ஒருநாள் தொடருக்கான அணியில் ஸ்டோக்ஸ் மற்றும் ஹேல்ஸ் சேர்க்கப்பட்டுள்ளனர். எனினும், அவர்கள் மீதான விசாரணை முடிவுகளின் பேரில் போட்டியில் அவர்கள் விளையாடுவது குறித்து முடிவெடுக்கப்படும்' என்றார்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் ஸ்டோக்ஸ் மீது போலீஸார் குற்றச்சாட்டு பதிவு செய்யாத பட்சத்தில் அவர் ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கு திரும்ப வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 ஆட்டங்களைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் ஜனவரி 14-ஆம் தேதி தொடங்குகிறது.
ஒருநாள் தொடர் அணி: இயான் மோர்கன் (கேப்டன்), மொயீன் அலி, ஜோனதன் பேர்ஸ்டோவ், ஜேக் பால், சாம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர், டாம் கியுரன், அலெக்ஸ் ஹேல்ஸ், லியாம் பிளங்கெட், ஆதில் ரஷீத், ஜோ ரூட், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், டேவிட் வில்லே, கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com