"தென் ஆப்பிரிக்க தொடரை இந்தியா வெல்ல வாய்ப்பு'

தென் ஆப்பிரிக்காவில் வரும் ஜனவரி மாதம் டெஸ்ட் தொடர் விளையாட இருக்கும் இந்திய அணியைக் காணும்போது, அந்த மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்ற வாய்ப்புள்ளது என அணியின் முன்னாள் கேப்டன்

தென் ஆப்பிரிக்காவில் வரும் ஜனவரி மாதம் டெஸ்ட் தொடர் விளையாட இருக்கும் இந்திய அணியைக் காணும்போது, அந்த மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்ற வாய்ப்புள்ளது என அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் திராவிட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வியாழக்கிழமை கூறியதாவது:
தற்போது இருக்கும் இந்திய அணியானது, ஒரு தொடரில் வெற்றி பெறத் தேவையான அனைத்து தகுதிகளையும் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. தென் ஆப்பிரிக்க தொடரில் பங்கேற்க இருக்கும் பேட்ஸ்மேன்கள் சுமார் 40 முதல் 50 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் உடையவர்கள். சிறப்பாகச் செயல்படக் கூடிய ஆல்ரவுண்டர்களும் (ஹார்திக் பாண்டியா) அணியில் உள்ளனர். திறமிக்க சுழற்பந்துவீச்சாளர்களான அஸ்வின், ஜடேஜா ஆகியோரும் 
இருக்கின்றனர்.
எனவே, தென் ஆப்பிரிக்காவில் சற்று அதிருஷ்டமும், சரியான ஆடுகளமும் அமையும் பட்சத்தில் தொடரை இந்தியா கைப்பற்றுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதென நம்புகிறேன்.
சில வேளைகளில், போட்டிகள் அட்டவணையின் அடிப்படையில் அணியின் வீரர்களுக்கு நெருக்கடி இருக்கலாம். அந்த வகையில் வீரர்களுக்கான பணிச்சுமை என்பது அனைத்து அணிக்களுக்கும் பொதுவான ஒன்றாகும்.
அவர்களுக்கான வேலைப் பளுவை குறைப்பதென்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இருப்பினும் அதைச் செய்யும் பட்சத்தில் அவர்களது செயல்பாடு இன்னும் சிறப்பாக இருக்கும்.
கோலியைப் பொருத்த வரையில், களத்தில் ஆடும்போது அவர் காட்டும் தீவிரமானது அணியின் சகவீரர்களுக்கு ஊக்கமளிப்பதாகவும், முன்னுதாரணமாகவும் இருக்கிறது என்று திராவிட் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com