பாட்மிண்டன் தரவரிசை: 4-ஆவது இடத்தில் ஸ்ரீகாந்த்

சர்வதேச பாட்மிண்டன் தரவரிசையின் ஆடவர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், ஓரிடம் முன்னேறி 4-ஆவது இடத்துக்கு வந்துள்ளார்.

சர்வதேச பாட்மிண்டன் தரவரிசையின் ஆடவர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், ஓரிடம் முன்னேறி 4-ஆவது இடத்துக்கு வந்துள்ளார்.
காயம் காரணமாக சீன ஓபன், ஹாங்காங் ஓபன் போட்டிகளை தவிர்த்த ஸ்ரீகாந்த், அடுத்த வாரம் நடைபெறவுள்ள துபை சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் பங்கேற்க உள்ளார்.
இதனிடையே, இந்திய இளம் வீரரான லக்ஷயா சென் 19 இடங்கள் முன்னேறி 89-ஆவது இடத்துக்கு வந்துள்ளார். இந்த சீசனில் நடைபெற்ற சர்வதேச போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதை அடுத்து லக்ஷயா இத்தகைய முன்னேற்றத்தை அடைந்துள்ளார்.
யுராஸியா பல்கேரிய ஓபன், இந்திய சர்வதேச சீரிஸ் ஆகிய பட்டங்களை கைப்பற்றிய லக்ஷயா சென், டாடா ஓபன் இந்தியா சர்வதேச போட்டியில் இறுதிச்சுற்று வரை முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இதர இந்திய வீரர்களான ஹெச்.எஸ்.பிரணாய், சாய் பிரணீத் ஆகியோர் முறையே 10 மற்றும் 17-ஆவது இடங்களில் நீடிக்கின்றனர்.
மகளிர் பிரிவு: சர்வதேச தரவரிசையின் மகளிர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து தனது 3-ஆவது இடத்திலும், சாய்னா நெவால் 10-ஆவது இடத்திலும் தொடருகின்றனர். இளம் வீராங்கனை ரிதுபர்னா தாஸ் 3 இடங்கள் முன்னேறி 49-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
கலப்பு இரட்டையர் பிரிவில் பிரணவ் ஜெர்ரி சோப்ரா-சிக்கி ரெட்டி ஜோடி தங்களது 19-ஆவது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com