தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பயிற்சி ஆட்டம் ரத்து

தென்னாப்பிரிக்கா-இந்தியா அணிகளுக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் தொடங்குவதற்கு முன், இரு அணிகளுக்கு இடையே நடைபெற இருந்த 2 நாள் பயிற்சி ஆட்டத்தை அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம்

தென்னாப்பிரிக்கா-இந்தியா அணிகளுக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் தொடங்குவதற்கு முன், இரு அணிகளுக்கு இடையே நடைபெற இருந்த 2 நாள் பயிற்சி ஆட்டத்தை அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் திடீரென ரத்து செய்துள்ளது.
இதுகுறித்து அந்த நிர்வாகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், 'இந்தியாவுக்கு எதிரான 2 நாள் பயிற்சி ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த தினங்களில் இந்திய அணி பயிற்சியில் ஈடுபடலாம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி, 3 டி20 போட்டி முடிவடைந்த பிறகு, இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு, அந்நாட்டு அணியுடன் 3 டெஸ்ட் தொடர்களை இந்திய அணி விளையாட உள்ளது.
ஜனவரி 5-ஆம் தேதி, கேப் டவுனில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. அத்துடன், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 6 ஒரு நாள் ஆட்டங்களிலும், 3 டி20 ஆட்டங்களிலும் இந்தியா விளையாடவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com