துபை ஒபன் பாட்மிண்டன் இன்று தொடக்கம்: பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த் பங்கேற்பு

துபையில் புதன்கிழமை தொடங்கவுள்ள உலக சூப்பர் சீரிஸ் பைனல்ஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
துபை ஒபன் பாட்மிண்டன் இன்று தொடக்கம்: பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த் பங்கேற்பு

துபையில் புதன்கிழமை தொடங்கவுள்ள உலக சூப்பர் சீரிஸ் பைனல்ஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
உலகத் தரவரிசையில் முன்னிலை வகிக்கும் வீரர், வீராங்கனைகள் மட்டும் பங்கேற்கும் இந்தப் போட்டியில், இருவரும் முறையே தங்களது பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் பங்கேற்கின்றனர்.
முதல் ஆட்டத்தில், மகளிர் பிரிவில் உலகத் தரவரிசையில் 3-ஆவது இடத்தில் இருக்கும் பி.வி.சிந்து, தரவரிசையில் 9-ஆவது இடத்தில் இருக்கும் சீனாவின் ஹி பிங்ஜியாவை எதிர்கொள்கிறார். இதேபோல், ஆடவர் பிரிவில், உலகத் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் டென்மார்க்கின் விக்டர் ஆக்ஸல்ஸன்னை தரவரிசையில் 4-ஆவது இடத்தில் இருக்கும் ஸ்ரீகாந்த் எதிர்கொள்கிறார்.
இந்த ஆண்டு நடைபெற்ற 12 சூப்பர் சீரிஸ் போட்டிகளில் சிந்து பங்கேற்றுள்ளார். இந்தியா ஓபன், கொரியா ஓபன் ஆகிய போட்டிகளில் சாம்பியன் பட்டத்தையும், கிளாஸ்கோ உலக சாம்பியன்ஷிப் போட்டி, கடந்த மாதம் நடைபெற்ற ஹாங் காங் ஓபன் போட்டி ஆகியவற்றில் வெள்ளிப் பதக்கமும் வென்று முழு உத்வேகத்துடன் உள்ளார் சிந்து. 
இதேபோல், இந்த ஆண்டில் நடைபெற்ற இந்தோனேஷியா ஓபன், ஆஸ்திரேலியா ஓபன், டென்மார்க் ஓபன், பிரெஞ்ச் ஓபன் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார் ஸ்ரீகாந்த். சிங்கப்பூர் ஓபனில் மட்டுமே சக நாட்டவரான சாய் ப்ரணீத்திடம் இறுதிச்சுற்றில் தோல்வி அடைந்தார்.
தசை பிடிப்பால் பாதிக்கப்பட்டதால், சீனா ஓபன், ஹாங் காங் ஓபனில் அவரால் பங்கேற்க இயலவில்லை.
கடந்த 2015-ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்திய ஓப்பனில் விக்டர் ஆக்ஸ்லென்னை வீழ்த்தி ஸ்ரீகாந்த் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இதனால், இரு வீரர்களுக்கு இடையே புதன்கிழமை நடைபெறும் ஆட்டம் விறுவிப்பாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கலாம்.
முழு உடல் தகுதியுடன் இருக்கும் ஸ்ரீகாந்த், துபை ஓபனில் பங்கேற்பது குறித்து கூறியதாவது:
உலக சூப்பர் சீரிஸ் பைனல்ஸில் இதற்கு முன்பு கடந்த 2014-ஆம் ஆண்டு அரையிறுதி வரை முன்னேறியிருக்கிறேன். 2015-இல் லீக் சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறினேன். ஆனால், ஒரு விளையாட்டு வீரர் என்றால் தோல்வியை மறந்துவிட்டு புதிய உத்வேகத்துடன் அடுத்தடுத்த போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டும். இந்த ஆண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என்றார் ஸ்ரீகாந்த்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com