யுவராஜ் சிங் பிறந்த தினம்: சக வீரர்கள் வாழ்த்து

இந்திய கிரிக்கெட் அணி மூத்த வீரர்களில் ஒருவரான யுவராஜ் சிங்கின் பிறந்த தினத்தையொட்டி (டிச.12), அவருக்கு ஓய்வு பெற்ற அதிரடி வீரர் சேவாக், வித்தியாசமாக வாழ்த்து தெரிவித்தார்.
யுவராஜ் சிங் பிறந்த தினம்: சக வீரர்கள் வாழ்த்து

இந்திய கிரிக்கெட் அணி மூத்த வீரர்களில் ஒருவரான யுவராஜ் சிங்கின் பிறந்த தினத்தையொட்டி (டிச.12), அவருக்கு ஓய்வு பெற்ற அதிரடி வீரர் சேவாக், வித்தியாசமாக வாழ்த்து தெரிவித்தார்.
சச்சின் டெண்டுல்கர், முன்னாள் கேப்டன் கங்குலி, சுரேஷ் ரெய்னா, ஜடேஜா, பூம்ரா, முகமது ஷமி, தவன் உள்ளிட்ட வீரர்களும், ரசிகர்களும் சமூக வலைதளமான சுட்டுரையில் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
36-ஆவது வயதில் அடியெடுத்து வைக்கும் யுவராஜ் சிங், பல சோதனைகளைக் கடந்து வந்தார். அதிரடியாக விளையாடக் கூடிய வீரர்களில் மிக முக்கியமானவர் யுவராஜ்.
புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்டு வந்து பலருக்கு முன்னுதாரணமாகத் திழக்கிறார்.
சேவாக் வாழ்த்து: 24 ஆங்கில எழுத்துகளை மட்டும் குறிப்பிட்டு, இந்த எழுத்துகளில் தொடங்கும் பெயர்கள் கொண்ட நபர்களில் அதிகம் பேரை சந்திக்கலாம். ஆனால், இதில் விடுபட்ட யு, வி ஆகிய எழுத்துகளைக் கொண்டு அழைக்கப்படும் ஒருவரை (யுவராஜ்) சந்திப்பது அரிதினும் அரிதான ஒன்று என்று சுட்டுரையில் குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்தார் சேவாக். 
சச்சின் வாழ்த்து: சாம்பியன்களும், போராளிகளும் இருக்கின்றனர். ஆனால், இரண்டும் சேர்ந்து ஒருவராக யுவராஜ் இருக்கிறார். வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துகள் யுவராஜ் என்று சுட்டுரையில் சச்சின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com