போட்டிப் போட்டுக்கொண்டு இரட்டைச் சதங்கள் எடுக்கும் ரோஹித் சர்மா & விராட் கோலி!

ஒருநாள் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியும் இரட்டைச் சதங்களாகக் குவித்து அசத்தி வருகிறார்கள்...
போட்டிப் போட்டுக்கொண்டு இரட்டைச் சதங்கள் எடுக்கும் ரோஹித் சர்மா & விராட் கோலி!

ஒருநாள் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியும் இரட்டைச் சதங்களாகக் குவித்து அசத்தி வருகிறார்கள்.

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் ஆட்டத்தில் 141 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. கேப்டன் ரோஹித் சர்மா இரட்டை சதம் அடித்து அசத்தினார். முதலில் 126 பந்துகளில் 116 ரன்கள் குவித்திருந்த ரோஹித், கடைசி 27 பந்துகளில் 92 ரன்கள் (11 சிக்ஸ், 3 பவுண்டரி) குவித்தார். இது ரோஹித் சர்மாவின் 3-வது இரட்டைச் சதம்.

ஒருநாள் போட்டியின் சரித்திரத்தில் இதுவரை எந்தவொரு வீரரும் 3 இரட்டைச் சதங்களை எடுத்ததில்லை. 

ஒருநாள் போட்டியில் இரட்டைச் சதங்கள்

ரோஹித் சர்மா - 3

இதர 2398 வீரர்களில் கிடைத்த இரட்டைச் சதங்கள் - 4

இந்திய வீரர்கள் இரட்டை சதம் (ஒரு நாள் போட்டி) 

சச்சின் டெண்டுல்கர் 200* (2010) vs தென்னாப்பிரிக்கா

விரேந்தர் சேவாக் 219 (2011) vs மே.இ. தீவுகள்

ரோஹித் சர்மா 209 (2013) vs ஆஸ்திரேலியா

ரோஹித் சர்மா 264 (2014) vs இலங்கை

ரோஹித் சர்மா 208* (2017) vs இலங்கை

சர்வதேச ஒரு நாள் போட்டியில் அதிக ஸ்கோர்

ரோஹித் சர்மா 264

மார்ட்டின் குப்தில் 237* 
விரேந்தர் சேவாக் 219 
கிறிஸ் கெயில் 215 
ரோஹித் சர்மா 209
ரோஹித் சர்மா 208*
சச்சின் டெண்டுல்கர் 200*

கடந்த ஐந்து வருடங்களில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ஸ்கோர் எடுத்த இந்தியர்

2013 - ரோஹித் சர்மா 209
2014 - ரோஹித் சர்மா 264
2015 - ரோஹித் சர்மா 150
2016 - ரோஹித் சர்மா 171*
2017 - ரோஹித் சர்மா 208*

*

ரோஹித் சர்மா ஒருநாள் கிரிக்கெட்டில் அசத்திக்கொண்டிருக்க, இந்திய கேப்டன் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டைச் சதங்கள் எடுத்து அசத்தி வருகிறார். 

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரு இரட்டைச் சதங்கள் உள்ளிட்ட மூன்று சதங்களுடன் 610 ரன்கள் எடுத்தார் கோலி. கடைசி டெஸ்டில் தனது 6-வது இரட்டைச் சதத்தை எட்டினார். அதனை அவர் 238 பந்துகளில் 20 பவுண்டரிகளுடன் விளாசியிருந்தார். இதன்மூலம் அவர் பல சாதனைகளைப் படைத்தார்.

* சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 6 இரட்டைச் சதம் அடித்த முதல் கேப்டன் என்ற பெருமையை அவர் அடைந்தார். இந்தச் சாதனையை தனது 63-ஆவது டெஸ்ட் போட்டியில் எட்டினார் கோலி. இதன்மூலம், மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் வீரர் பிரையன் லாராவின் சாதனையை அவர் தகர்த்தார். முன்னதாக, பிரையன் லாரா ஒரு கேப்டனாக 5 இரட்டைச் சதம் விளாசியிருந்ததே அதிகபட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

* தனது இந்த இரட்டைச் சதம் மூலமாக டெஸ்ட் போட்டியில் அதிக இரட்டைச் சதம் அடித்த இந்திய வீரர்கள் வரிசையில் சச்சின் மற்றும் சேவாக்கின் சாதனையை கோலி சமன் செய்தார். முன்னதாக சச்சின் 6 இரட்டைச் சதங்களும், சேவாக் 4 இரட்டைச் சதங்கள், 2 முச்சதங்களும் விளாசியிருந்தது நினைவுகூரத்தக்கது.

* அடுத்தடுத்து இரட்டைச் சதம் விளாசிய 2-ஆவது இந்திய வீரர் கோலி ஆவார். முதல் வீரரான வினோத் காம்ப்ளி, கடந்த 1993-ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிராக மும்பையில் 224 ரன்களும், ஜிம்பாப்வேக்கு எதிராக தில்லியில் 227 ரன்களும் விளாசியிருந்தார்.

* சர்வதேச அளவில் அதிக இரட்டைச் சதம் அடித்த வீரர்கள் வரிசையில் விராட் கோலி 6-ஆவது இடத்தில் இருக்கிறார். முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் (12 இரட்டைச் சதங்கள்) உள்ளார். இலங்கையின் குமார் சங்ககாரா (11), மேற்கிந்தியத் தீவுகளின் பிரையன் லாரா (9), இங்கிலாந்தின் வேலி ஹமோத் (7), இலங்கையின் மகிலா ஜெயவர்தனே (7) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

டெஸ்டில் இரட்டைச் சதங்கள் எடுத்த கேப்டன்கள் (ஜூலை 2016-க்குப் பிறகு)

கோலி - 6
இதர கேப்டன்கள் - 0

இரட்டைச் சதங்கள் எடுத்த இந்திய கேப்டன்கள்

1932 - 2015 - 4 (பட்டோடி, கவாஸ்கர், டெண்டுல்கர், தோனி)
2016 முதல் - 6 (அனைத்தும் கோலி எடுத்தவை)

டெஸ்ட் போட்டியில் கோலி

2011 - 2015: 41 டெஸ்டுகள், 72 இன்னிங்ஸ், இரட்டைச் சதங்கள் எதுவுமில்லை

2016 முதல் - 22 டெஸ்டுகள், 33 இன்னிங்ஸ், ஆறு இரட்டைச் சதங்கள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com