ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்த ஸ்டீவ் வாஹ் மகன்!

நியூஸிலாந்தில் ஜனவரி 13 முதல் பிப்ரவரி 3 வரை 19 வயதுக்குட்பட்ட ஜூனியர் உலகக் கோப்பைப் போட்டி நடைபெறுகிறது...
ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்த ஸ்டீவ் வாஹ் மகன்!

நியூஸிலாந்தில் ஜனவரி 13 முதல் பிப்ரவரி 3 வரை 19 வயதுக்குட்பட்ட ஜூனியர் உலகக் கோப்பைப் போட்டி நடைபெறுகிறது. இதற்கான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணியில் பிரபல வீரரும் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டனுமான ஸ்டீவ் வாஹின் மகன் ஆஸ்டின் வாஹ் இடம்பெற்றுள்ளார். இதற்கு முன்பு இலங்கைக்கு எதிரான ஆஸ்திரேலிய ஜூனியர் அணியில் இடம்பிடித்த ஆஸ்டின் தற்போது உலகக் கோப்பை அணியிலும் இடம்பிடித்துள்ளார். ஆல்ரவுண்டரான ஆஸ்டின், பெளலிங்கில் வேகப்பந்துவீச்சாளராக உள்ளார். ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ரையன் ஹாரிஸ் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

ஜனவரி 14 அன்று நடைபெற்றவுள்ள போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை எதிர்கொள்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com