இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு 100% ஊதிய உயர்வு?

இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஆண்டு ஊதியம் 100 சதவீதம் உயர்த்தப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு 100% ஊதிய உயர்வு?

இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஆண்டு ஊதியம் 100 சதவீதம் உயர்த்தப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேப்டன் கோலியின் ஊதியம் ரூ.10 கோடியாக உயர வாய்ப்புள்ளதாக 
கூறப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் வீரர்கள், "ஏ', "பி', "சி' என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஆண்டு ஊதியம் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி, கேப்டன் விராட் கோலி, அஸ்வின் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் "ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ளனர். இந்தப் பிரிவில் இடம்பெற்றுள்ளவர்களுக்கு ஆண்டு ஊதியம் ரூ.2 கோடி அளிக்கப்பட்டு வருகிறது. "பி' பிரிவில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கு ரூ.1 கோடியும், "சி' பிரிவில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கு ரூ.50 லட்சமும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஒப்பந்தம் கடந்த செப்டம்பர் மாதத்துடன் காலாவதி ஆகிவிட்டது. அதிக போட்டிகளில் பங்கேற்பதால், வீரர்களுக்கான ஆண்டு ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்று பிசிசிஐ நிர்வாகக் குழுத் தலைவர் வினோத் ராயிடம், விராட் கோலி, அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் அண்மையில் வலியுறுத்தியிருந்தனர்.

இந்நிலையில், கிரிக்கெட் வீரர்களுக்கான ஆண்டு ஊதியத்தை 100 சதவீதம் உயர்த்தும் வகையில், புதிய ஊதிய பட்டியலை வினோத் ராய் தலைமையிலான பிசிசிஐ நிர்வாகக் குழு தயாரித்து வருவதாக கூறப்படுகிறது.

வீரர்களுக்கான ஆண்டு ஊதியத்தை அளிக்க பிசிசிஐ ரூ.180 கோடியை ஒதுக்கி வருகிறது. தற்போது, அந்தத் தொகையுடன் மேலும் ரூ.200 கோடி கூடுதலாக சேர்க்கப்படும் என்று தெரிகிறது.

இதன்காரணமாக, அந்தத் தொகை ரூ.380 கோடியாக அதிகரிக்கும்.
இதுகுறித்து தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:

சீனியர், ஜூனியர் வீரர்களுக்கான புதிய ஆண்டு ஊதியப் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஒப்புதலுக்காக புதிய பட்டியல் பிசிசிஐ பொதுக் குழுவில் சமர்ப்பிக்கப்படும்.

பிசிசிஐ மொத்த ஆண்டு வருவாயில் 26 சதவீதம் 3 பகுதியாக பிரிக்கப்படும். முதல் தர வீரர்களுக்கான ஆண்டு ஊதியத்துக்கு 13 சதவீதமும், இரண்டாம் தர வீரர்களுக்கு 10.6 சதவீதமும், எஞ்சியுள்ளவை மகளிர் மற்றும் ஜூனியர்களுக்கு ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கோலி போன்ற முன்னணி வீரர்களுக்கான ஆண்டு ஊதியமும் புதிய ஊதிய பட்டியலில் மாறுபாடும். இந்த ஆண்டு மட்டும் இதுவரை 46 ஆட்டங்களில் விளையாடிய கோலிக்கு பிசிசிஐ ரூ.5.5 கோடி ஊதியம் அளித்துள்ளது.
புதிய ஊதிய பட்டியல் தயாரிக்கப்பட்ட பிறகு, அவரது ஆண்டு வருவாய் ரூ.10 கோடிக்கும் அதிகமாக வாய்ப்புள்ளது.

ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதன் மூலம், கோலி மேலும் அதிக ஊதியம் ஈட்டுவார் என்ற அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com