காமன்வெல்த் மல்யுத்தப் போட்டி: முதல் நாளில் 10 தங்கம் வென்றது இந்தியா

தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்ஸ்பர்க் நகரில் சனிக்கிழமை தொடங்கிய காமன்வெல்த் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் நாளில் ஆடவர் பிரிவில் தலா 10 தங்கப்பதக்கமும், 10 வெள்ளிப்பதக்கமும் வென்றது இந்தியா.

தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்ஸ்பர்க் நகரில் சனிக்கிழமை தொடங்கிய காமன்வெல்த் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் நாளில் ஆடவர் பிரிவில் தலா 10 தங்கப்பதக்கமும், 10 வெள்ளிப்பதக்கமும் வென்றது இந்தியா.
கிரேக்க ரோமன் பிரிவில் நடைபெற்ற போட்டியில் இந்தப் பதக்கங்களை இந்திய வீரர்கள் கைப்பற்றினர்.
பல்வேறு எடைப் பிரிவுகளில் தங்கம் வென்ற வீரர்கள் விவரம்:
ராஜேந்தர் குமார் (55 கிலோ எடைப் பிரிவு), மணீஷ் (60 கிலோ),
விகாஸ் (63 கிலோ), அனில் குமார் (67 கிலோ), ஆதித்ய கண்டு (72 கிலோ), குருபிரீத் (77கிலோ), ஹரிபிரீத் (82 கிலோ), சுனில் (87 கிலோ), ஹர்தீப் (97 கிலோ), நவீன் (130 கிலோ).
இதேபோல், 10 வேறுபட்ட எடைப் பிரிவுகளில் நடைபெற்ற மல்யுத்த போட்டியில், இந்தியாவின் 10 வீரர்கள் வெள்ளி வென்றனர். மகளிர் பிரிவு மல்யுத்த போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com