ஐஎஸ்எல்: பெங்களூரை வீழ்த்தியது சென்னை

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்தாட்டப் போட்டியின் 26-ஆவது ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி அணி 2-1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு எஃப்சி அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது.

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்தாட்டப் போட்டியின் 26-ஆவது ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி அணி 2-1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு எஃப்சி அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது.
பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை வீரர் ஜிஜி லால்பெக்லுவா 5-ஆவது நிமிடத்தில் கோல் அடித்து, முதல் பாதியில் அணியை முன்னிலைப்படுத்தினார். 
2-ஆவது பாதியில் பெங்களூரு வீரர் சுனில் சேத்ரி 85-ஆவது நிமிடத்தில் கோலடித்து ஆட்டத்தை சமன் செய்தார். விறு விறுப்பான இறுதி கட்டத்தில் சென்னை வீரர் தனபால் கணேஷ் 88-ஆவது நிமிடத்தில் கோலடித்து அணியை வெற்றி பெறச் செய்தார்.
கொல்கத்தா வெற்றி: இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை மும்பையில் நடைபெற்ற 27-ஆவது ஆட்டத்தில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணி 1-0 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டி எஃப்சி அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது. கொல்கத்தா சார்பில் ராபின் சிங் 54-ஆவது நிமிடத்தில் கோல் அடித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com