மல்யுத்த சாம்பியன்ஷிப்: தங்கம் வென்றார் சுஷில் குமார்

காமன்வெல்த் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சுஷில் குமார் தங்கப் பதக்கம் வென்றார்.

காமன்வெல்த் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சுஷில் குமார் தங்கப் பதக்கம் வென்றார்.
74 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில் போட்டியிட்ட சுஷில் குமார், இறுதிச்சுற்றில் நியூஸிலாந்தின் அகாஷ் குலார்ஸை வீழ்த்தி முதலிடம் பிடித்தார்.
இது, கடந்த 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு சர்வதேச மல்யுத்தத்தில் சுஷில் குமார் வெல்லும் முதல் தங்கமாகும். அந்த ஆண்டில் அவர் கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.
இதனிடையே, இந்தப் போட்டியில் சுஷில் குமார் தங்கம் வென்ற அதே பிரிவில், இந்தியாவின் பர்வீன் ரானா வெண்கலப் பதக்கம் வென்றார்.
இப்போட்டியின் முதல் சுற்றில் தென் ஆப்பிரிக்காவின் ஜோஹன்னஸ் பெட்ராஸ் போத்தாவை 8-0 என்ற கணக்கில் வென்ற சுஷில் குமார், காலிறுதியில் பர்வீன் ரானாவை 5-4 என்ற கணக்கில் வென்றார். அரையிறுதியில் அவர் கனடாவின் ஜஸ்மித் சிங் புல்காவை வீழ்த்தினார்.
வெற்றிக்குப் பிறகு சுஷில் குமார் தனது சுட்டுரைப் பக்கத்தில், "சர்வதேச களத்துக்கு 3 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பியுள்ள நிலையில், தங்கம் வென்றுள்ளேன். இது எனக்கு மிகவும் பெருமை மற்றும் உணர்வுப்பூர்வமிக்க தருணமாகும். இந்த தங்கப் பதக்கத்தை எனது தாய்நாட்டிற்கும், பயிற்சியாளருக்கும் சமர்ப்பிக்கிறேன்' என்று பதிவிட்டிருந்தார்.
சாக்ஷிக்கு தங்கம்: அதேபோல், இப்போட்டியில் மகளிருக்கான 62 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில் இந்தியாவின் சாக்ஷி மாலிக் நியூஸிலாந்தின் டெய்லா டுவாஹைன் ஃபோர்டை 13-2 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com