தரவரிசையில் அதிகப் புள்ளிகள் எடுத்து பிராட்மேனுக்கு அருகில் சென்றுள்ள ஸ்டீவ் ஸ்மித்!

டான் பிராட்மேனின் 961 புள்ளிகளுக்கு நெருக்கமாகச் சென்று 945 புள்ளிகள் எடுத்திருப்பது கிரிக்கெட் உலகை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
தரவரிசையில் அதிகப் புள்ளிகள் எடுத்து பிராட்மேனுக்கு அருகில் சென்றுள்ள ஸ்டீவ் ஸ்மித்!

ஐசிசியின் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 945 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இந்திய கேப்டன் விராட் கோலி 893 புள்ளிகளுடன் 2-வது இடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளார். இதையடுத்து டான் பிராட்மேனின் 961 புள்ளிகளுக்கு நெருக்கமாகச் சென்று 945 புள்ளிகள் எடுத்திருப்பது கிரிக்கெட் உலகை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக புள்ளிகள் எடுத்துள்ள பேட்ஸ்மேன்கள் பட்டியலில் ஹட்டனுடன் இணைந்து 2-ம் இடத்தில் உள்ளார் ஸ்மித்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக புள்ளிகள் எடுத்துள்ள பேட்ஸ்மேன்கள்

961 - டான் பிராட்மேன், 1948
945 - லென் ஹட்டன், 1954
945 - ஸ்டீவ் ஸ்மித், 2017
942 - ஜேக் ஹாப்ஸ், 1912
942 - ரிக்கி பாண்டிங், 2006

தரவரிசைப் பட்டியலில், பந்துவீச்சாளர்களில் இங்கிலாந்தின் ஆண்டர்சன் முதலிடத்தில் உள்ளார். ஆஷஸ் மூன்றாவது டெஸ்டில் அசத்திய ஹேஸில்வுட் டாப் 5 பட்டியலில் இடம்பிடித்துள்ளார். 

ஐசிசி - பேட்ஸ்மேன்கள் தரவரிசை

1. ஸ்டீவ் ஸ்மித்
2. விராட் கோலி
3. புஜாரா
4. கேன் வில்லியம்சன்
5. ஜோ ரூட்

ஐசிசி - பந்துவீச்சாளர்கள் தரவரிசை

1. ஜேம்ஸ் ஆண்டர்சன்
2. ரபடா
3. ஜடேஜா
4. அஸ்வின்
5. ஹேஸில்வுட்

ஐசிசி - ஆல்ரவுண்டர்கள் தரவரிசை

1. ஷகிப் அல் ஹசன்
2. ஜடேஜா
3. பென் ஸ்டோக்ஸ்
4. அஸ்வின்
5. மொயீன் அலி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com