தொழில்முறை குத்துச்சண்டையில் தொடர்ந்து 10-ஆவது வெற்றியை பதிவு செய்த விஜேந்தர் சிங்

தொழில்முறை குத்துச்சண்டை போட்டிகளில் இந்தியாவின் விஜேந்தர் சிங், தொடர்ந்து 10-ஆவது வெற்றியை சனிக்கிழமை பதிவு செய்தார்.
தொழில்முறை குத்துச்சண்டையில் தொடர்ந்து 10-ஆவது வெற்றியை பதிவு செய்த விஜேந்தர் சிங்

இந்தியாவைச் சேர்ந்த நட்சத்திர குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் (வயது 32), ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றவர். தற்போது ப்ரோ பாக்ஸிங் எனப்படும் தொழில்முறை குத்துச்சண்டை போட்டியில் 2015-ம் ஆண்டு முதல் பங்கேற்று வருகிறார்.

இதில், டபள்யூ.பி.ஒ ஓரியண்டல் மற்றும் ஆசிய பசிஃபிக் சூப்பர் மிடில்வெயிட் சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் தொழில்முறை குத்துச்சண்டையில் போட்டியிட்ட 9 போட்டிகளிலும் விஜேந்தர் வெற்றிபெற்றுள்ளார்.

இந்நிலையில், கானாவைச் சேர்ந்த எர்னஸ்ட் அமுஸுவுடன் ராஜஸ்தானில் உள்ள சவாய் மான் சிங் விளையாட்டு அரங்கில் சனிக்கிழமை மோதினார்.

இதில், துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய விஜேந்தர் விட்ட குத்துகளை கானா வீரர் எதிர்கொள்ளத் திணறினார். மேலும், கானா வீரரின் தடுப்பாட்டத்தை தகர்த்து விஜேந்தர் அபாரமாக செயல்பட்டார்.

இதனால், எர்னஸ்ட்டை எளிதில் வீழ்த்தி தொழில்முறை குத்துச்சண்டைப் போட்டியில் தொடர்ச்சியாக 10-ஆவது வெற்றியைப் பதிவு செய்ததுடன், ஆசிய பசிஃபிக் சூப்பர் மிடில்வெயிட் சாம்பியன் பட்டத்தையும் இந்திய வீரர் விஜேந்தர் சிங் தக்க வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com