இங்கிலாந்துக்கு எதிரான 'பாக்சிங் டே டெஸ்ட்': ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் அணியில் இருந்து நீக்கம்!

நாளை மறுநாள் துவங்கவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான 'பாக்சிங் டே டெஸ்ட்': ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் அணியில் இருந்து நீக்கம்!

மெல்போர்ன்: நாளை மறுநாள் துவங்கவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுபயணம் செய்து வரும் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் வருகிற 26-ந்தேதி மெல்போர்னில் துவங்க உள்ளது. கிறிஸ்துமஸ் தினத்திற்கு மறுநாள் நடக்கும் இப்போட்டிக்கு ‘பாக்சிங் டே’ என்று பெயர்.

எப்போதும் முகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இப்போட்டியானது கருதப்படும். இந்நிலையில் வலது குதிகாலில் உண்டான காயம் காரணமாக மிட்செல் ஸ்டார்க் பாக்சிங் டே டெஸ்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

காயம் பெரிதாக இல்லாத காரணத்தைக் காட்டி ஸ்டார்க் இப்போட்டியில் விளையாட விரும்பினார். ஆனால் அடுத்ததாக   தென்ஆப்பிரிக்காவுடன் ஆஸ்திரேலியா விளையாட உள்ள காரணத்தால் ஸ்டார்க்கை விளையாட வைக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விரும்பவில்லை. இதனால் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் இருந்து ஸ்டார்க் நீக்கப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com