ஆஷஸ் டெஸ்ட்: குக் அபார இரட்டைச் சதம்! வலுவான நிலையில் இங்கிலாந்து!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் அலாஸ்டர் குக் இரட்டைச் சதமெடுத்து அசத்தியுள்ளார்...
ஆஷஸ் டெஸ்ட்: குக் அபார இரட்டைச் சதம்! வலுவான நிலையில் இங்கிலாந்து!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் அலாஸ்டர் குக் இரட்டைச் சதமெடுத்து அசத்தியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரில், பாக்ஸிங் டே அன்று தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட் செய்யத் தீர்மானித்து. ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 119 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் ஸ்டூவர்ட் பிராட் அதிகபட்சமாக 4, ஜேம்ஸ் ஆன்டர்சன் 3, கிறிஸ் வோக்ஸ் 2, டாம் கியுரன் ஒரு விக்கெட் வீழ்த்தியிருந்தனர்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து, புதன்கிழமை முடிவில் 57 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்தது. ஆட்டநேர முடிவில் அலாஸ்டர் குக் 104, கேப்டன் ஜோ ரூட் 49 ரன்களுடன் களத்தில் இருந்தனர். 

நேற்றைய ஆட்டத்தின் மூலம் இங்கிலாந்தின் அலாஸ்டர் குக் டெஸ்ட் போட்டியில் தனது 32-ஆவது சதத்தை பூர்த்தி செய்து, டெஸ்ட் சதமடித்த வீரர்கள் வரிசையில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் வாக்குடன் 7-ஆவது இடத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் தனது 5-ஆவது சதத்தை அடித்துள்ளார் அலாஸ்டர் குக். ஆஸ்திரேலியாவில் நடைபெறும் தொடரில் அந்த அணிக்கு எதிராக 5 அல்லது அதற்கு மேலான சதங்களை எட்டும் 5-ஆவது இங்கிலாந்து வீரர் குக் ஆவார். அலாஸ்டர் குக் கடந்த 10 இன்னிங்ஸ்களில் அரைசதம் கூட பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தின்போது அரைசதம் கடந்த அவர், அதில் 243 ரன்கள் குவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. எனினும் அவர்களாக் குக்கின் ஆட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஜோ ரூட் அரை சதமடித்து 61 ரன்களில் கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு வந்த வீரர்களால் நீண்ட நேரம் நிலைக்கமுடியாமல் வெளியேறினார். மறுமுனையில் வலுவாக விளையாடி வந்த குக், 360 பந்துகளில் இரட்டைச் சதத்தைப் பூர்த்தி செய்து மெல்பர்ன் ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றார். 

151 டெஸ்டுகளில் 5 இரட்டைச் சதங்கள் எடுத்துள்ளார் குக். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2-வது முறையாக இரட்டைச் சதமெடுத்துள்ளார். 

இங்கிலாந்து அணி 128 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 416 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com