ஹைதராபாத் டெஸ்ட்: கோலி, சஹா அபாரம்: இந்தியா 687/6 டிக்ளேர்  

வங்கதேசத்திற்கு எதிரான ஹைதராபாத் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளான இன்று அணித்தலைவர் கோலி மற்றும் விருத்திமான் சஹாவின் சிறப்பான ஆட்டடத்தினால் ...
ஹைதராபாத் டெஸ்ட்: கோலி, சஹா அபாரம்: இந்தியா 687/6 டிக்ளேர்  

ஹைதராபாத்: வங்கதேசத்திற்கு எதிரான ஹைதராபாத் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளான இன்று அணித்தலைவர் கோலி மற்றும் விருத்திமான் சஹாவின் சிறப்பான ஆட்டத்தினால் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 687 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது.

மூன்று விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் என்ற நேற்றைய ஸ்கோருடன் இந்தியா தனது இரண்டாம் நாள் ஆட்டத்தை துவக்கியது. சிறப்பாக விளையாடி வந்த ரஹானே  73 பந்துகளில் அரைசதம் அடித்தார். 98.1 ஓவர்களில் இந்தியா 400 ரன்களைக் கடந்தது. 82 ரன்களை எடுத்திருந்த நிலையில் ரஹானே தைஜுல் இஸ்லாம் பந்துவீச்சில் மேஹதி ஹாஸனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். பின்னர் கோலியுடன் விரிதிமான் சஹா இணைந்தார்.

உணவு இடைவேளையின் பொழுது இந்தியா நான்கு விக்கெட் இழப்பிற்கு 477 ரன்கள் எடுத்திருந்தது. உணவு இடைவேளைக்கு பிறகு சிறப்பாக விளையாடி வந்த கோலி 239 பந்துகளில் இரட்டை சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 204 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார்.

இந்த இரட்டை சதத்தின் மூலம் தொடர்ந்து நான்கு டெஸ்ட் தொடர்களில் இரட்டை சத்தம் அடித்த முதல் வீரர்   என்ற சாதனையை கோலி படைத்தார்.

அவருக்கு பின்னர் ஜடேஜா காலம் இறங்கினார். இவரோடு விக்கெட் கீப்பர் சஹாவும் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். இறுதியாக ஜடேஜா 60 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா 166 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 687 ரன்கள் குவித்திருக்கும்போது தன்னுடைய முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. சகா 106 ரன்னுடனும், ஜடேஜா 60 ரன்னுடனும் அவுட்டாகாமல் இருந்தனர். வங்கதேச அணி சார்பில் அதிகபட்சமாக தைஜூல் இஸ்லாம் 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

பின்னர் வங்கதேசம் தனது முதல் இன்னிங்க்ஸை துவக்கியது. தமீம் இக்பாலும் சவும்யா சர்க்காரும் களம் இறங்கினார்கள். சவும்யா சர்க்கார் 15 ரன்கள் எடுத்திருந்த நிழ்க்கையில் உமேஷ்யாதவ் பந்து வீச்சில் சஹாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.

ஆட்ட நேர இறுதியில் தமிம் இக்பால் 24 ரன்களுடனும், நைட் வாட்ச்மேனாக களம் இறங்கிய மொமினுல் ஹக் 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com