பயிற்சி ஆட்டம்: ஆஸ்திரேலியா 81/2

இந்தியா ஏ தரப்பில் நவ்தீப் சயினி இரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
பயிற்சி ஆட்டம்: ஆஸ்திரேலியா 81/2

இந்தியா "ஏ'-ஆஸ்திரேலியா இடையிலான 3 நாள் பயிற்சி கிரிக்கெட் ஆட்டம் மும்பையில் இன்று தொடங்கியது. 

ஹார்திக் பாண்டியா தலைமையிலான இந்திய "ஏ' அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரர்களுக்கு இந்தப் போட்டி நல்ல வாய்ப்பாகும். அதேநேரத்தில் ஆஸ்திரேலிய அணி பங்கேற்கும் ஒரே பயிற்சிப் போட்டி இதுதான். எனவே அந்த அணியினர் இந்தப் போட்டியை முடிந்த அளவுக்கு சிறப்பாக பயன்படுத்தி இங்குள்ள சூழலுக்கு ஏற்றவாறு தங்களை தகவமைத்துக் கொள்ள முயற்சிப்பார்கள்.

டாஸ் வென்ற இந்தியா ஏ அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. உணவு இடைவேளையின்போது ஆஸ்திரேலிய அணி, 24 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க வீரர்களான வார்னர் 25, ரென்ஷா 11 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். இந்தியா ஏ தரப்பில் நவ்தீப் சயினி இரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரும் 23-ஆம் தேதி புணேவில் தொடங்குகிறது. அதை முன்னிட்டே இந்தப் பயிற்சி போட்டி நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com