பயிற்சிப் போட்டி: ஆஸ்திரேலியா 469 ரன்களில் டிக்ளேர்

இந்திய "ஏ' அணிக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 127 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 469 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
பயிற்சிப் போட்டி: ஆஸ்திரேலியா 469 ரன்களில் டிக்ளேர்

இந்திய "ஏ' அணிக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 127 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 469 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரும் 23-ஆம் தேதி புணேவில் தொடங்குகிறது. அதை முன்னிட்டு ஆஸ்திரேலியா-இந்திய "ஏ' அணிகள் இடையிலான 3 நாள் பயிற்சி கிரிக்கெட் போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது.
இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 107 ரன்களும், ஷான் மார்ஷ் 104 ரன்களும் குவித்து ரிட்டையர்ட் அவுட் முறையில் வெளியேற, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 90 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் குவித்திருந்தது. மிட்செல் மார்ஷ் 16, மேத்யூ வேட் 7 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
மிட்செல் மார்ஷ் 75: 2-ஆவது நாளான சனிக்கிழமை தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் மார்ஷ், மேத்யூ வேட் ஆகியோர் அசத்தலாக ஆட, அந்த அணி மிக எளிதாக 400 ரன்களைக் கடந்தது. தொடர்ந்து சிறப்பாக ஆடிய மேத்யூ வேட் 89 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். மேத்யூ வேட்-மிட்செல் மார்ஷ் ஜோடி 6-ஆவது விக்கெட்டுக்கு 129 ரன்கள் குவித்தது.
ஆஸ்திரேலியா 454 ரன்களை எட்டியபோது மிட்செல் மார்ஷ் ஆட்டமிழந்தார். அவர் 159 பந்துகளில் 1 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 75 ரன்கள் குவித்தார். அந்த அணி 127 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 469 ரன்கள் குவித்திருந்தபோது டிக்ளேர் செய்வதாக அறிவித்தார் கேப்டன் ஸ்மித். அப்போது கிளன் மேக்ஸ்வெல் 16, ஸ்டீவ் ஓ"கீப் 8 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்தியத் தரப்பில் நிதின் சைனி 2 விக்கெட்டுகளையும், ஹார்திக் பாண்டியா, சபேஸ் நதீம், ஹெர்வாத்கர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
ஷ்ரேயஸ் அதிரடி: பின்னர் முதல் இன்னிங்ûஸ ஆடிய இந்திய "ஏ' அணியில் ஹெர்வாத்கர் 4 ரன்களில் நடையைக் கட்ட, பி.கே.பன்சாலுடன் இணைந்தார் ஷ்ரேயஸ் ஐயர். வந்த வேகத்தில் லயன் பந்துவீச்சில் சிக்ஸரை விளாசி ரன் கணக்கைத் தொடங்கிய ஷ்ரேயஸ் ஐயர், தொடர்ச்சியாக சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் பறக்கவிட்டார்.
இதனிடையே பி.கே.பன்சால் 36 ரன்களில் நடையைக் கட்ட, அங்கித் பாவ்னே களம்புகுந்தார். மறுமுனையில் தொடர்ந்து வேகம் காட்டிய ஷ்ரேயஸ் ஐயர் 44 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். இதன்பிறகு பாவ்னே 25 ரன்களில் வெளியேற, பின்னர் வந்த கேப்டன் ஹார்திக் பாண்டியா 19 ரன்கள் சேர்த்த நிலையில் ஜாக்சன் பேர்ட் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட்டிடம் கேட்ச் ஆனார்.
2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய "ஏ' அணி 51 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்துள்ளது. ஷ்ரேயர் ஐயர் 93 பந்துகளில் 5 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 85, ரிஷப் பந்த் 10 பந்துகளில் 3 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளனர்.
ஆஸ்திரேலியத் தரப்பில் ஜாக்சன் பேர்ட், நாதன் லயன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
கடைசி நாள் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்டுவதற்கு இந்திய "ஏ' அணி இன்னும் 293 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com