நோ பாலில் கிளீன் போல்ட் ஆகி தப்பிப் பிழைத்த வார்னர்!

15-வது ஓவரில் வார்னரை அற்புதமாக கிளின் போல்ட் செய்தார் ஜெயந்த் யாதவ்.
நோ பாலில் கிளீன் போல்ட் ஆகி தப்பிப் பிழைத்த வார்னர்!

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி புணேவில் இன்று தொடங்கியது. தொடர்ச்சியாக 6 டெஸ்ட் தொடர்களைக் கைப்பற்றியுள்ள கோலி தலைமையிலான இந்திய அணி, 7-ஆவது டெஸ்ட் தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது. 

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்மித், பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் புவனேஸ்வருக்குப் பதிலாக ஜெயந்த் யாதவ் இடம்பிடித்தார்.

ஆரம்பம் முதல் மிகவும் கவனமாக விளையாடினார் தொடக்க வீரர்களான வார்னரும் ரென்ஷாவும். தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் பக்குவமாக விளையாடினார் வார்னர். 

15-வது ஓவரில் வார்னரை அற்புதமாக கிளின் போல்ட் செய்தார் ஜெயந்த் யாதவ். ஆனால் அது நோ பால் என்பதால் தப்பிப் பிழைத்தார் வார்னர். 

இதன்பிறகு பெரிய ஆபத்தின்றி 23 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலிய அணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com