டிவில்லியர்ஸ் அதிரடி; தென் ஆப்பிரிக்காவுக்கு 2-ஆவது வெற்றி

நியூஸிலாந்துக்கு எதிரான 3-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 159 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது தென் ஆப்பிரிக்கா.
டிவில்லியர்ஸ் அதிரடி; தென் ஆப்பிரிக்காவுக்கு 2-ஆவது வெற்றி

நியூஸிலாந்துக்கு எதிரான 3-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 159 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது தென் ஆப்பிரிக்கா.
இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 2-1 என முன்னிலை பெற்றுள்ளது தென் ஆப்பிரிக்கா.
நியூஸிலாந்தின் வெலிங்டன் நகரில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் குவித்தது.
அந்த அணியின் கேப்டன் டிவில்லியர்ஸ் 80 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 85 ரன்களும், தொடக்க வீரர் டி காக் 70 பந்துகளில் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 68 ரன்களும் குவித்தனர்.
நியூஸிலாந்து தரப்பில் கிராண்ட்ஹோம் 2 விக்கெட் வீழ்த்தினார்.
நியூஸிலாந்து தோல்வி: பின்னர் ஆடிய நியூஸிலாந்து அணி, தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் 32.2 ஓவர்களில் 112 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக கிராண்ட்ஹோம் ஆட்டமிழக்காமல் 34 ரன்கள் எடுத்தார்.
தென் ஆப்பிரிக்கத் தரப்பில் பிரிட்டோரியஸ் 3 விக்கெட் வீழ்த்தினார். டிவில்லியர்ஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

டிவில்லியர்ஸ் 9,000

நியூஸிலாந்துக்கு எதிராக 5 ரன்கள் எடுத்தபோது ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் 9 ஆயிரம் ரன்கள் குவித்த 18-ஆவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார் டிவில்லியர்ஸ். இந்த மைல்கல்லை எட்டிய 2-ஆவது தென் ஆப்பிரிக்க வீரர் ஆவார். முதல் வீரர் காலிஸ்.
டிவில்லியர்ஸ் தனது 205-ஆவது இன்னிங்ஸில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். இதன்மூலம் அதிவேகமாக 9 ஆயிரம் ரன்களை எட்டியவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். முன்னதாக செளரவ் கங்குலி 228 இன்னிங்ஸ்களில் 9 ஆயிரம் ரன்களை எட்டியதே சாதனையாக இருந்தது.
9,005 பந்துகளில் 9 ஆயிரம் ரன்களை எட்டியுள்ள டிவில்லியர்ஸ், குறைந்த பந்துகளில் அந்த மைல்கல்லை எட்டியவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். முன்னதாக ஆடம் கில்கிறிஸ்ட் 9,328 பந்துகளில் மேற்கண்ட மைல்கல்லை எட்டியதே சாதனையாக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com