இந்திய அணி தோல்வியிலிருந்து மீண்டு வரும்: சச்சின் நம்பிக்கை

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தோல்வி கண்ட இந்திய அணி, அதிலிருந்து மீண்டு வரும் என முன்னாள் இந்திய கேப்டன் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி தோல்வியிலிருந்து மீண்டு வரும்: சச்சின் நம்பிக்கை

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தோல்வி கண்ட இந்திய அணி, அதிலிருந்து மீண்டு வரும் என முன்னாள் இந்திய கேப்டன் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
புணே டெஸ்டில் இந்திய அணி 333 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி கண்டது. இந்த நிலையில் தில்லி ஜவாஹர்லால் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை மாரத்தான் போட்டியைத் தொடங்கி வைத்த சச்சின் மேலும் கூறியதாவது:
ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடர் நமக்கு எப்போதுமே கடினமானதுதான். இது விளையாட்டின் ஒரு பகுதியாகும். இந்திய அணி ஒரு போட்டியில் தோற்றதால் தொடரை இழந்துவிட்டதாக அர்த்தமாகாது. இன்னும் 3 போட்டிகள் உள்ளன. எனவே வெற்றி வாய்ப்பை இழந்துவிடவில்லை. இந்திய அணியின் உத்வேகத்தைப் பற்றி எனக்குத் தெரியும். நிச்சயம் இந்திய அணி இந்தத் தோல்வியிலிருந்து மீண்டு வரும். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். ஒவ்வொரு அணிக்கும், ஒவ்வொரு வீரருக்கும் இனிமையான தருணமும், கடினமான தருணமும் வரும். அப்போது நீங்கள் சரிவிலிருந்து மீண்டு மறுபடியும் சவால் அளிக்க வேண்டும். அதுதான் விளையாட்டின் மீதான ஆர்வத்தை தூண்டுகிறது. அதற்காகத்தான் வீரர்கள் விளையாடுகிறார்கள் என்றார்.

"ஜெயந்த், இஷாந்தை நீக்க வேண்டும்'

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா ஆகியோருக்கு வாய்ப்பளிக்கக் கூடாது என முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது: மோசமான பேட்டிங் ஓர் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும். இந்திய அணி தொடரை இழந்துவிட்டதாக நான் கூறவில்லை. ஆனால் மறுபடியும் வெற்றிப் பாதைக்கு திரும்புவது அவசியம். பெங்களூர் மைதானத்தில் பெரிய அளவில் பந்துகள் சுழலாது. எனவே ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மாவை ஆடும் லெவனில் இருந்து நீக்க வேண்டும்.
என்னைப் பொறுத்தவரையில் அடுத்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கூடுதல் பேட்ஸ்மேனுடன் களமிறங்க வேண்டும். கருண் நாயருக்கு வாய்ப்பளிக்க வேண்டும். ஜெயந்த் யாதவுக்குப் பதிலாக கருண் நாயர் இடம்பெறுவார் என நினைக்கிறேன். இதேபோல் இஷாந்த் சர்மாவின் பந்துவீச்சு எடுபடவில்லை. எனவே அவருக்குப் பதிலாக புவனேஸ்வர் குமாரை சேர்க்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com