ஹாக்கி இந்தியா லீக்: கலிங்கா லேன்சர்ஸ் சாம்பியன்

ஹாக்கி இந்தியா லீக் போட்டியில் கலிங்கா லேன்சர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

ஹாக்கி இந்தியா லீக் போட்டியில் கலிங்கா லேன்சர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
சண்டீகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் கலிங்கா லேன்சர்ஸ் அணி 4-1 என்ற கோல் கணக்கில் டபாங் மும்பை அணியைத் தோற்கடித்தது.
கலிங்கா லேன்சர்ஸ் அணி தரப்பில் கேப்டன் மோரிட்ஸ் பியூர்ஸ்டே பெனால்டி வாய்ப்பில் இரு கோல்களையும் (30 மற்றும் 58-ஆவது நிமிடங்களில்), கிளன் டர்னர் இரு கோல்களையும் (18-ஆவது நிமிடம்) அடித்தனர்.
முன்னதாக நடைபெற்ற வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் உத்தரப் பிரதேச விஸார்ட்ஸ் அணி 5-4 என்ற கோல் கணக்கில் டெல்லி வேவ்ரைடர்ஸ் அணியைத் தோற்கடித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com