ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட்: மும்பையை வென்று கோப்பையை கைப்பற்றிய குஜராத்! 

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் மும்பையை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வென்ற குஜராத் அணி முதன்முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது. 
ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட்: மும்பையை வென்று கோப்பையை கைப்பற்றிய குஜராத்! 

இந்தூர்: மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் மும்பையை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வென்ற குஜராத் அணி முதன்முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது. 

ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்று வந்தது. இதில் பல முறை ரஞ்சிக்கோப்பையை வென்று சாதனை படைத்திருக்கும் மும்பை அணியும், குஜராத்  அணியும் மோதின.

முதலில் பேட் செய்த மும்பை அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 228 ரன்கள் மட்டுமே எடுத்து.பின்னர் தனது முதல் இன்னிங்க்ஸை துவக்கிய குஜராத் அணி. மும்பை அணியின் கட்டுப்பாடான பந்து வீச்சால் 328 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.

100 ரன்கள் பின்தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்க்ஸை துவக்கிய மும்பை அணி, தனது வீரர்களின் சிறப்பான ஆட்டத்தினால் 411 ரன்களைக் குவித்து ஆட்டம் இழந்தது. இதன் காரணமாக குஜராத் அணிக்கு 312 ரன்கள் வெற்றி இலக்காக்க நிர்ணயிக்கப்பட்டது.

குஜராத் அணியின் இரண்டாவது இன்னிங்சில் அந்த அணியின் துவக்க ஆட்டக்காரரும், விக்கெட் கீப்பருமான பார்திவ் படேல் நிதானமாக விளையாடினார். அவ்வப்பொழுது விக்கெட்டுகள் விழுந்தாலும், தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் சதம் அடித்தார். இறுதியில் குஜராத் அணி ஐந்து விக்கெட்டுகளை இழந்து 313 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பார்த்திவ் படேல் 143 ரன்கள் அடித்தார்.

குஜராத் அணி ரஞ்சி கோப்பையை வெல்வது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com