தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்தது இலங்கை

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 3-ஆவது, இறுதி டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 118 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி தோல்வியடைந்தது. இதன் மூலம் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரையும் அந்த அணி முழுமை
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்தது இலங்கை

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 3-ஆவது, இறுதி டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 118 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி தோல்வியடைந்தது. இதன் மூலம் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரையும் அந்த அணி முழுமையாக இழந்தது.
இந்த இரு அணிகளுக்கு இடையிலான இறுதி டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்கில் கடந்த வியாழக்கிழமை தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 423 ரன்கள் எடுத்தது.
இதில் டுமினி 155 ரன்களும், ஆம்லா 134 ரன்கள் எடுத்தார். அடுத்து முதல் இன்னிங்ûஸ தொடங்கிய இலங்கை அணி வீரர்கள் தென்னாப்பிரிக்க பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் 131 ரன்களுக்கு அந்த அணி சுருண்டது. தொடர்ந்து பாலோ ஆன் பெற்று 2-ஆவது இன்னிங்ûஸ இலங்கை அணி தொடர்ந்தது.
இந்த இன்னிங்ஸிலும் இலங்கை அணி வீரர்களால் ஓரளவுக்கு மேல் தாக்குப் பிடித்து விளையாட முடியவில்லை. 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் ஆட்டம் 3-ஆவது நாளிலேயே முடிவுக்கு வந்தது.
ஒரு இன்னிங்ஸ் மற்றும் 118 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. சதமடித்த டுமினி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
ஏற்கெனவே நடைபெற்ற இரு டெஸ்ட் போட்டிகளிலும் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்ற நிலையில் இப்போது 3-ஆவது டெஸ்ட் போட்டியிலும் அந்த அணி அபாரமாக வெற்றி பெற்று தொடரையும் முழுமையாகக் கைப்பற்றியது. இத்தொடரின் நாயகனாக தென்னாப்பிரிக்க தொடக்க வீரர் எல்கர் அறிவிக்கப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com