அற்புதமான தமிழ்நாட்டு மக்களுக்கு...: தமிழில் ட்வீட் செய்து அசத்திய வீரேந்திர சேவாக்!

அற்புதமான தமிழ்நாட்டு மக்களுக்கு மிகுந்த மரியாதையை உரித்தாக்குகிறேன். அமைதியைத் தொடருங்கள்...
அற்புதமான தமிழ்நாட்டு மக்களுக்கு...: தமிழில் ட்வீட் செய்து அசத்திய வீரேந்திர சேவாக்!

தமிழகத்தின் கலாசாரப் பாரம்பரியத்துடன் இணைந்த விளையாட்டாக விளங்கும் ஜல்லிக்கட்டு, பொங்கல் பண்டிகையை ஒட்டி நடத்தப்படுகிறது. 2 ஆயிரம் ஆண்டுகள் மிகப் பழமையானது இந்த விளையாட்டுப் போட்டி. ஆனால், தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த தடை விதித்து கடந்த 2014-ஆம் ஆண்டு மே 7-ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது.

தமிழகத்திலும், மகாராஷ்டிரத்திலும் ஜல்லிக்கட்டு, எருதுப் போட்டிகள் மூலமாக விலங்குகளை காட்சிப்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழக மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதையடுத்து ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி தமிழகம் முழுக்க தீவிரமான போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன

கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், இன்று இந்தப் போராட்டத்துக்கு அதரவு தெரிவித்து தமிழில் ட்வீட் செய்துள்ளார். அவர் கூறியதாவது:

அற்புதமான தமிழ்நாட்டு மக்களுக்கு மிகுந்த மரியாதையை உரித்தாக்குகிறேன். அமைதியைத் தொடருங்கள். அன்புடன் என்று எழுதியுள்ளார். சேவாக்கின் இந்தத் தமிழ் ட்வீட் சமூகவலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டுவருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com