துளிகள்...

துளிகள்...

* இந்தியா-இங்கிலாந்து இடையேயான 19 வயதுக்கு உள்பட்டோருக்கான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை விதர்பா கிரிக்கெட் சங்கம் மகாராஷ்டிரத்தில் நடத்த உள்ளது.
* "இந்திய ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை தீபா கர்மாகருக்கு அற்புதமான திறமை உள்ளது. அவரைப் போல ஆபத்தான "புரோடுனோவா' ஜிம்னாஸ்டிக்ஸ் முறையை முயற்சிக்க நான் விரும்பவில்லை' என்று ரியோ ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்ஸில் தங்கம் வென்ற அமெரிக்க வீராங்கனை சைமன் பேல்ஸ் கூறினார்.
* பாட்மிண்டன் விளையாடிக் கொண்டே, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தடகள வீரர்கள் குழு உறுப்பினராக செயல்படுவது எளிதானதாக இல்லை என்று இந்திய வீராங்கனை சாய்னா நெவால் கூறினார்.
* ஹீரோ மகளிர் தொழில்முறை கோல்ஃப் விளையாட்டுப் போட்டியில் நேஹா திரிபாதி வெள்ளிக்கிழமை பட்டம் வென்றார்.
* 5-ஆவது ஹாக்கி இந்தியா லீக் போட்டி சனிக்கிழமை தொடங்கும் நிலையில், முதல் ஆட்டத்தில் ராஞ்சி ரேஸ் அணியை எதிர்கொள்கிறது தபங் மும்பை அணி.
* 17 வயதுக்கு உள்பட்டோருக்கான கிரானாட்கின் நினைவு கோப்பை கால்பந்துப் போட்டியில் தஜிகிஸ்தானிடம் 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்ந்தது இந்தியா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com