தேசிய இளையோர் குத்துச்சண்டை: இறுதிச்சுற்றில் மன்தீப் கெளர்

தேசிய இளையோர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் பஞ்சாப் வீராங்கனை மன்தீப் கெளர் 57 கிலோ எடைப் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு சனிக்கிழமை முன்னேறினார்.

முன்னதாக, தனது அரையிறுதியில் சத்தீஸ்கரின் ராஜ்பாலாவை எதிர்கொண்ட மன்தீப், தனது இறுதிச்சுற்றில் ஹரியாணாவின் சாக்ஷியை சந்திக்கிறார். சாக்ஷி தனது அரையிறுதியில் மணிப்பூரின் ஒஜிபாலா தேவியை வீழ்த்தியுள்ளார்.
மகளிர் லைட் ஃப்ளைவெயிட் (48 கிலோ) பிரிவில் ஹரியாணாவின் ஜோதி- தில்லியின் தன்வி கெüஷலையும், மத்தியப் பிரதேசத்தின் அஞ்சலி சர்மா-பஞ்சாபின் பபிதா ராணியையும் 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினர். ஆடவர் பிரிவில் லைட் ஃப்ளை வெயிட் (46-49 கிலோ) பிரிவின் இறுதிச்சுற்றில் சண்டீகரின் அன்சுல் பூனியா-சர்வீஸ் அணியின் பாருன்சிங் ஆகியோர் மோத உள்ளனர். ஃப்ளை வெயிட் பிரிவில் சர்வீஸஸின் வில்சன் சிங், பஞ்சாபின் குருபிரீத் சிங் ஆகியோர் இறுதிச்சுற்றில் சந்திக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com